Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை அணியில் ஜடேஜா இல்லை!!.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரபர கருத்து.. காரணம் என்ன தெரியுமா??

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜடேஜா இருக்க மாட்டார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இதற்கான அணியை தேர்வு செய்யும் பணிகளில் தான் அனைத்து அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

இந்திய அணியை பொறுத்தவரையில் இன்னும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆசியக்கோப்பை என 3 தொடர்கள் மட்டுமே வீரர்களை தேர்வு செய்ய உள்ளது. பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் இன்னும் உள்ள சூழலில் பவுலிங்கில் தான் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

மஞ்ச்ரேக்கர் கருத்து

மஞ்ச்ரேக்கர் கருத்து

யுவேந்திர சாஹல் அட்டகாசமான ஃபார்மில் இருப்பதால், தனது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார். இவருக்கு அடுத்தபடியாக அக்‌ஷர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் வரிசையில் உள்ளனர். ஆனால் இதில் ஜடேஜாவுக்கு இடம் கிடைப்பது கடினம் என மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

இதுகுறித்து பேசிய அவர், ஜடேஜா பவுலிங்கை விட, பேட்டிங்கிற்கு தான் தற்போது பரிந்துரைக்கப்பட்டு வருகிறார். ஆனால் அணியில் தற்போது தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஃபினிஷர் பணிக்கு உள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது ரிஷப் பண்ட்-ம் போட்டிக்கு உள்ளதால், ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். எனவே அக்‌ஷர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடின நேரம்

கடின நேரம்

சிறந்த ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன்சியை ஏற்று, பின்னர் தோனியிடம் கொடுத்துவிட்டார். ஒரு மறக்கக்கூடிய சீசனாக 10 போட்டிகளில் 116 ரன்களும், 5 விக்கெட்களை மட்டுமே எடுத்தார். அதன்பின்னர் காயமும் ஏற்பட்டதால், தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடவில்லை. தற்போது இங்கிலாந்து தொடரில் களமிறங்கியுள்ளார்.

Story first published: Saturday, June 25, 2022, 15:49 [IST]
Other articles published on Jun 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+