டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி, டெல்லிக்கு எதிராக பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில், ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால், பிளேயிங் லெவனில் 3 சுழற்பந்தவீச்சாளர்களை டெல்லி அணி தேர்வு செய்தது.
பிளேயிங் லெவனில் லலித் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆட்டத்தின் முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் ருதுராஜ ஒரு பவுண்டரி அடிக்க, 6 ரன்கள் மொத்தமாக சேர்க்கப்பட்டது. அப்போது, கிரிக்கெட் வர்ணனையாளர்கள், ருதுராஜ் கடந்த 5 போட்டிகளில் ஸ்பின்னர் பந்துவீச்சில் தான் ஆட்டமிழந்தார்.

இதனால், டெல்லி அணி , சுழற்பந்துவீச்சாளர்களை அழைத்து பந்து வீச வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதற்கு ஏற்றார் போல், ருதுராஜ் லலித் யாதவ் வீசிய பந்தை பேக் ஃபுட்டில் நின்று பந்தை மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடித்தார்,
இதை பற்றி பேசிய சஞ்சய் மஞ்சுரேக்கர், இந்த தொடரில் நல்ல பேட்ஸ்மேன்கள் எல்லாம் சுழற்பந்துவீச்சை ஒரே மாதிரியாக தான் ஆடுகிறார்கள். பின் காலில் நின்று சூர்யகுமார் யாதவ், கிளாசென் ஆகியார் எல்லாம் அப்படி தான் விளையாடுகிறார்கள். இன்று ருதுராஜூம் அப்படி தான் பந்தை எதிர்கொண்டதாக சஞ்சு மஞ்சுரேக்கர் கூறினார்.