Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆத்தா..நான் பாஸாயிட்டேன்..... யோ-யோ (அரியர்) டெஸ்டில் பாஸ் செய்த சஞ்சு சாம்சன்

Recommended Video

யோ-யோ டெஸ்டில் தகுதி பெற்ற சஞ்சு சாம்சன்- வீடியோ

பெங்களூரு: சஞ்சு சாம்சன் நேற்று நடந்த யோ-யோ டெஸ்டில் பாஸ் செய்து, தன் உடற் தகுதியை நிரூபித்துள்ளார். முன்னதாக அவர் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால் இந்தியா “ஏ” அணியில் பங்கு பெறும் வாய்ப்பை இழந்தார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய சஞ்சு சாம்சன், 441 ரன்கள் எடுத்து, தன் திறமையை நிரூபித்தார். இதன் மூலம், அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இந்தியா “ஏ” அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், இந்தியா “ஏ” அணிக்கான போட்டிகள் தொடங்கும் முன்பு யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால், அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டார்.

தெறிக்க விடும் யோ யோ

தெறிக்க விடும் யோ யோ

இவரைப் போன்றே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டும், உடற்தகுதிக்கான யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், அம்பத்தி ராயுடு மற்றும் முகம்மது ஷமி ஆகியோர் அணியில் ஆடும் வாய்ப்பை இழந்தனர்.

யோ யோ சர்ச்சை

யோ யோ சர்ச்சை

இதைத் தொடர்ந்து, யோ-யோ டெஸ்ட் குறித்த சர்ச்சை வெடித்தது. சில முன்னாள் வீரர்கள் யோ-யோ டெஸ்ட் தேவைதானா? என கேட்க பலரும் தங்கள் கருத்துக்களை கூற ஆரம்பித்தனர். ஐபிஎல்-இல் ரன் குவித்த வீரர்களுக்கு உடற்தகுதி இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருப்பதாக சிலர் கூறினர்.

டென்ஷன் சாஸ்திரி

டென்ஷன் சாஸ்திரி

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக, "யோ-யோ டெஸ்டில் தேர்வு பெற்றால், நீங்கள் ஆடலாம், தோல்வி அடைந்தால், நீங்கள் வெளியே போகலாம்" என கூறினார். இதனையடுத்து, யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி அடையாமல், இந்திய அணியில் விளையாட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சாம்சன் பாஸ்

சாம்சன் பாஸ்

இந்த நிலையில், மீண்டும் யோ-யோ டெஸ்டில் பங்கேற்ற சஞ்சு சாம்சன், 17.3 புள்ளிகள் பெற்று தேர்வு பெற்றார். யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 16.1 புள்ளிகள் எடுத்து இருக்க வேண்டும். முன்னதாக, சஞ்சு சாம்சன் 15.6 புள்ளிகள் பெற்று தோல்வி அடைந்திருந்தார்.

தற்போது, உடற்தகுதியை நிரூபித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு, விரைவில் இந்திய "ஏ" அணியில் ஆட வாய்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.










Story first published: Thursday, July 12, 2018, 16:24 [IST]
Other articles published on Jul 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+