For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம சேட்டன் சஞ்சு சாம்சன் - சாருலதா காதல் திருமணம் சக்சஸ்.. வாங்க வாழ்த்துவோம்!

திருவனந்தபுரம் : பிரபல கேரள கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தன் நீண்ட நாள் தோழியை இன்று வீட்டில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இன்று மாலையே வரவேற்பு விழா நடைபெற உள்ளது.

ஐபிஎல் பிரபலம் சஞ்சு சாம்சன்

ஐபிஎல் பிரபலம் சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் ஆடியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான வீரர் ஆவார். கேரள ரஞ்சி அணியில் ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.

சாருலதா யார்?

சாருலதா யார்?

அவரது மனைவி சாருலதா தற்போது மனித வள மேம்பாடு தொடர்பான மேற்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கேரளாவின் பிரபல பத்திரிக்கையான மாத்ருபூமியின் தலைமை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் கதை

காதல் கதை

இருவரும் கல்லூரியில் படித்த போது அறிமுகமாகி நண்பர்களாக மாறி உள்ளனர். பின்னர் அது காதலாக மாறி உள்ளது. சுமார் ஐந்து வருட காதலுக்கு பின் கடந்த செப்டம்பர் மாதம் சஞ்சு சாம்சன் தன் நீண்ட நாள் காதலியுடன் திருமணம் நிச்சயம் ஆன செய்தியை அறிவித்தார். அதன் படி இன்று, சனிக்கிழமை திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.

சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வளர்ச்சி

சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வளர்ச்சி

சஞ்சு சாம்சன் முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆடியுள்ளார். இந்த முறை ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2018 ஐபிஎல் சீசனில் 441 ரன்கள் அடித்து நல்ல பார்மில் இருந்தார். சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் ஆடி உள்ளார். 2015இல் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆடியுள்ளார்.

Story first published: Saturday, December 22, 2018, 18:55 [IST]
Other articles published on Dec 22, 2018
English summary
Sanju Samson married his long time girlfriend Charulatha in a simple ceremony.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+