Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புனேக்கு எதிராக புயலாய் மாறிய சஞ்சு சாம்சன்.. அதிரடியாக சதம் விளாசி அசத்தல்

புனே: 10-வது ஐபிஎல் சீசனில் புனே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார் டெல்லி வீரர் சஞ்சு சாம்சன்.

ஐபிஎல் லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. புனேவில் இன்று நடைபெற்று வரும் 9வது லீக் போட்டியில் டெல்லி டேர்வில்ஸ் அணியும், புனே அணியும் மோதியது. இதில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது.

Sanju Samson raises his bat after slamming his maiden IPL hundred

சஞ்சு சாம்சன்:

கேரளத்தை சேர்ந்த 22 வயதான இளம் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் விளாசினார். 63 பந்துகளை சந்தித்த சாம்சன், 8 பவுண்டரி, 5 சிக்ஸர் என 102 ரன்கள் எடுத்தார். டி20 தொடரில் இது அவரின் முதல் சதம் ஆகும்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்று வரும் சஞ்சு சாம்சன், இதற்கு முன் 2016ல் நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லியில் நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தார்.

தவிர, ஒட்டு மொத்த டி-20 அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை சாம்சன் இன்று பதிவு செய்தார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சதம் விளாசிய பெருமையும் சாம்சனையே சேரும்.

Story first published: Tuesday, April 11, 2017, 23:53 [IST]
Other articles published on Apr 11, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+