For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷான் கிஷனுக்கு ரெஸ்ட்.. சஞ்சு சாம்சனுக்கு கடைசி வாய்ப்பு.. டெஸ்ட் வைக்கும் கேப்டன் ரோகித் சர்மா!

மும்பை: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பின், இந்திய அணி அயர்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் நடக்கவுள்ளது.

Sanju Samson to be selected as a main wicket keeper for the Ireland T20 Series

இந்த டி20 தொடருக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடி வரும் இஷான் கிஷனுக்கு அயர்லாந்து டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இவர்கள் இருவருமே உலகக்கோப்பைத் தொடருக்கான பேக் அப் விக்கெட் கீப்பருக்கான போட்டியில் இருக்கிறார்கள். ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் மெயின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இதனால் ஆசியக் கோப்பைத் தொடருக்கு கேஎல் ராகுல் தயாராகி வருவதால், உலகக்கோப்பைத் தொடருக்கு ஒரேயொரு பேக் அப் விக்கெட் கீப்பரே போதுமானது.

Sanju Samson to be selected as a main wicket keeper for the Ireland T20 Series

இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது மிடில் ஆர்டரில் இஷான் கிஷனுக்கும், அயர்லாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்கள் உலகக்கோப்பைத் தொடருக்கான பேக் அப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் ஆசியக் கோப்பைத் தொடருக்கு தயாராகி வருகிறார்கள். இதனால் ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவருக்கும் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் முக்கியத்துவம் வழங்கப்படும். இதனால் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் அக்னி பரீட்சையாக இரு தொடர்களும் அமைந்துள்ளது. இதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sanju Samson to be selected as a main wicket keeper for the Ireland T20 Series
Story first published: Thursday, July 20, 2023, 16:10 [IST]
Other articles published on Jul 20, 2023
English summary
Ire vs Ind: Indian Star Cricketer Sanju Samson likely to be the Main Wicket Keeper for the Ireland T20 Series. Also BCCI plans to give rest to Ishan Kishan due to Asia Cup 2023.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+