Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சன் சில நேரம் எரிச்சல் தருவார்.. ஆனால் இன்று.. தமிழக வீரர் கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தன்னுடைய முதல் ஆட்டத்தை 2015 ஆம் ஆண்டு விளையாடிய சஞ்சு சாம்சன் இதுவரை அணியில் ஒரு நிரந்தரம் இடம் கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். 9 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் சாம்சன் மொத்தமாகவே 44 சர்வதேச போட்டிகளில் தான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இந்த சூழலில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடைசி மூன்று டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றார். இந்த சூழலில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றிருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு t20 அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ind vs zim sanju samson virat kohli rohit sharma

29 வயதான சஞ்சு சாம்சன் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கூட இந்தியா தடுமாறியபோது, 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அணியை மீட்டார். இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த், சாம்சங் குறித்து பல்வேறு விஷயங்களை பேசி இருக்கிறார்கள். இதில் இந்திய கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனாக இருப்பது மிகவும் கடினமானது என்று நான் நினைக்கின்றேன்.

சாம்சனிடம் அவ்வளவு திறமை இருந்தும், சில சமயம் அவர் நம்மை எரிச்சல் அடைய செய்வார். சில போட்டிகளில் பக்குவமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த மாட்டார். ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக சாம்சன் செயல்பட்டு இருக்கிறார். சூப்பர் ஸ்டார் வீரர்களுடனும் விளையாடி இருக்கிறார் அதேசமயம் பராக் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுடன் விளையாடி இருக்கிறார்.

தற்சமயம் இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் என்ற இடத்திற்கு கடும் போட்டி நிலவுகின்றது. இந்த நிலையில் தான் சாம்சன் இன்று ஒரு பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்திருக்கிறார். கடினமான சூழலில் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இன்று அணியை மீட்டெடுத்திருக்கிறார். விக்கெட் கீப்பர் என்ற இடத்திற்கு தாம் இன்னும் இருக்கின்றேன் என்னை பரீசலிக்காமல் விட்டு விடாதீர்கள் என்று எப்போதும் சாம்சன் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார் என்று அபினவ் முகுந்த் கூறியுள்ளார்.

Story first published: Monday, July 15, 2024, 17:20 [IST]
Other articles published on Jul 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+