Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினை தகாத வார்த்தையில் திட்டினேன்.. ஆனால் அவர் சொன்னதை மறக்க முடியாது.. பாக். வீரர் பேட்டி

மும்பை : 20 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டில் நீங்கள் எந்த தலைசிறந்த பந்துவீச்சாளர்களிடம் உங்களுக்கு நெருக்கடி கொடுத்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சச்சின் டெண்டுல்கர் தான்.

மெக்ராத், வார்னர், வசீம் அக்ரம், ஆலன் டோனால்ட், முரளிதரன், சோயிப் அக்தர் போன்ற எத்தனையோ வீரர்கள் சச்சினிடம் பந்துவீச்சில் அடி வாங்கி இருக்கிறார்கள். இதில் சிலர் சச்சினை சில முறை வீழ்த்தியும் இருக்கிறார்கள்.

குறிப்பாக பிரட்லீ, ஆண்டர்சன் மற்றும் அப்துல் ரசாக் போன்ற வீரர்கள் சச்சினை அதிக முறை ஆட்டம் இழக்க செய்திருக்கிறார்கள்.

சக்லின் முஸ்தாக் அனுபவம்

சக்லின் முஸ்தாக் அனுபவம்

இந்த நிலையில் அப்போதைய கிரிக்கெட்டில் சிறந்த சுழற் பந்துவீச்சாளராக விளங்கிய சக்லின் முஸ்தாக் சச்சின்யிடம் நிகழ்ந்த ஒரு அனுபவத்தை தற்போது கூறி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி கனடாவில் 1996 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை 16 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாடி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் 1997 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் ஒன்றை தான் தற்போது சக்லின் முஸ்தாக் கூறி இருக்கிறார்.

திட்டினேன்

திட்டினேன்

இதுகுறித்து பேசிய அவர் "எனக்கு சச்சின் உடன் ஒரு சம்பவம் நடந்தது மறக்க முடியாதது. நாங்கள் கனடாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்றோம். நான் இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி விட்டு அதே திமிருடன் நான் பந்து வீச வந்து இருந்தேன். சச்சின் ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர். நான் முதலில் பந்து வீசும் போது அவருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் செயல்பட்டேன். பிறகு அவரை தகாத வார்த்தையில் திட்டினேன்.

பதில் அளித்த சச்சின்

பதில் அளித்த சச்சின்

ஆனால் அவர் என் அருகில் வந்து சில வார்த்தைகளை சொன்னார். சக்கி, நீ இப்படி செய்வாய் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. உன்னை பார்ப்பதற்கு அவ்வளவு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும் ஆள் மாதிரி தெரியவில்லை. நான் உன்னை மிகவும் நல்லவன் என்று நினைத்தேன். ஆனால் நீ இப்படி செய்வாய் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அவர் சொன்ன வார்த்தை என்னை மிகவும் பாதித்தது .

சிறப்பான யுத்தி

சிறப்பான யுத்தி

நாம் தவறு செய்து விட்டோமே என்ற மன வருத்தத்திலே தொடர்ந்து பந்து வீசினேன். இதனை பயன்படுத்திக் கொண்ட சச்சின் பவுண்டரிகளாக விளாசி அசத்தினார். கடைசியில் தான் எனக்கு தெரிந்தது சச்சின் என்னிடம் அவருடைய சிறந்த யுத்தியை பயன்படுத்தி இருக்கிறார். ஒருவரைப் பற்றி நாம் நல்ல கருத்துக்களை கூறிவிட்டால், நாம் அதைப் பற்றி சிந்திப்போம். அவர்களுக்கு எதிராக நாம் ஆக்ரோஷமாக விளையாட மாட்டோம். இதை தான் சச்சின் என்னிடம் பயன்படுத்தினார்.

சிக்க வைத்தார்

சிக்க வைத்தார்

நான் சச்சின் மீது மரியாதை செலுத்த தொடங்கி விட்டதால் அவர் பவுண்டரிகளாக அடித்து ரன்கள் சேர்த்தார் .அதன் பிறகு என்னால் அவரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. போட்டி முடிந்தவுடன் மாலையில் நான் சச்சினை சந்தித்து நீங்கள் புத்திசாலியான வீரர் என்று பாராட்டினேன். அதற்கு அவர் சிரித்தார். பேட்டிங் மூலம் மட்டுமல்லாமல் வார்த்தையின் மூலமும் என்னை சச்சின் சிக்க வைத்தார்.

Story first published: Thursday, March 16, 2023, 12:59 [IST]
Other articles published on Mar 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+