Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பையில் புதிய தொழிலை தொடங்கிய சாரா டெண்டுல்கர்.. சுப்மன் கில் நேரில் வந்து வாழ்த்துவாரா?

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் மும்பையில் தனது முதல் பைலேட்ஸ் ஸ்டூடியோவை திறந்திருக்கிறார். ஊட்டச்சத்து நிபுணரான சாரா டெண்டுல்கர், உடல் மற்றும் மனம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் உடற்பயிற்சி மையத்தை சாரா திறந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இந்த ஸ்டூடியோவுக்கு சுப்மன் கில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் உடனான காதல் உறவு காரணமாக சாரா தொடர்ச்சியாக செய்திகளில் இடம்பெற்று வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாகவே சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இணை காதலித்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை பொதுவெளியில் இருவருமே தங்களின் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

Sara - Gill Relationship

லண்டனில் ஊட்டச்சத்து தொடர்பான துறையில் பட்டம் பெற்ற சாரா டெண்டுல்கர், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். இவருக்கென்று சோசியல் மீடியாவில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதேபோல் சாரா ஒரு பதிவு செய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணராகவும் இருக்கிறார். மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறையில் பட்டம் பெற்றவர்.

இந்த நிலையில் மும்பையின் அந்தேரி பகுதியில் சாரா டெண்டுல்கர் தனது புதிய பைலேட்ஸ் அகாடமி என்ற பெயரில் ஒரு கிளையை திறந்துள்ளார். அதாவது பைலேட்ஸ் என்பது மனம் மற்றும் உடலை ஒருங்கிணைக்கும் உடற்பயிற்சி முறையாகும். இதன் மூலமாக சாரா டெண்டுல்கர் புதிய அடையாளத்துடன் கூடிய உடற்பயிற்சி நிலையத்தை சாரா டெண்டுல்கர் தொடங்கி வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

இதனை சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரின் மனைவி அஞ்சலி இருவரும் பெருமிதத்துடன் திறந்து வைத்துள்ளனர். ஒவ்வொரு செங்கலாக சாரா இதனை உருவாக்கியதாகவும், தனது விருப்பத்திற்கு ஏற்ற தொழிலை சாரா தொடங்கி இருப்பதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அண்மையில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அவரின் நீண்ட கால தோழி சானியா சந்தோக்குடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இன்னொரு பக்கம் தனது மகள் சாராவுக்கு புதிய தொழிலை சச்சின் டெண்டுல்கர் தொடங்கி கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. சாரா டெண்டுல்கர் மாடலிங் துறையில் மட்டும் கவனம் செலுத்தாமல், தொழில் முனைவோராகவும் இருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த பைலேட்ஸ் ஸ்டூடியோவுக்கு சுப்மன் கில் நேரில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Story first published: Saturday, August 23, 2025, 13:52 [IST]
Other articles published on Aug 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+