மே.இந்திய அணியின் கேப்டனானார் சர்வான்
கிங்ஸ்டன்மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய கேப்டனாக சர்வான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு மேற்கிந்திய தீவுகள் அணியன் கேப்டன் லாரா. இதையடுத்து இந்த மாதம் 12ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டியிலும், 4 டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.
![]() |
இதற்கான மேற்கிந்திய தீவுகள் அணயின் கேப்படனாக சர்வான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாமுவேல்ஸ் நீக்கம்:
![]() |
அதே நேரத்தில் உலககோப்பை போட்டியில் மோசமாக விளையாடியதால் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சாமுவேல்ஸ் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வீரர்கள் விவரம்:
சர்வான் (கேப்டன்), சந்திரபால், கிறிஸ் கெய்ல், கோலிமோர், எட்வர்ட்ஸ், ஜோசப், மார்டன், பிராவோ, போவெல், ஜெயரோம் டெய்லர், ராம்தின், டாரன் சமி, தேவன் சுமித், ஜெயரோம் டெய்லர்.
இரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் வரும் 17ம் தேதி தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டிகளின் விவரம்:
முதல் டெஸ்ட் 17-21ம் தேதி வரை லண்டன் லார்ட்சிலும், 2வது டெஸ்ட் போட்டி 25-29ம் தேதி வரை லீட்சிலும், 3வது போட்டி ஜூன் 7 முதல் 11ம் தேதி வரை செஸ்டரிலும், கடைசி டெஸ்ட் போட்டி 15 முதல் 19ம் தேதி வரை செஸ்டர் லீ ஸ்டிட்டிலும் நடைபெறவுள்ளது.
ஒருநாள் போட்டிகள் ஜூலை 1ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடைபெறும்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications

