Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவை காப்பாற்று.. சேப்பாக்கம் நோக்கி மஞ்ச சட்டையோடு ஆரவாரமாக கிளம்பும் ரசிகர்கள்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிசிசிஐ அமைப்பை வலியுறுத்துவதற்காக SaveCSK என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் திறந்துள்ளனர் சென்னை ரசிகர்கள். மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கையெழுத்து இயக்கமும் நடத்த உள்ளனர்.

ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதை பேஸ்புக் போன்ற நிறுவனங்களும் ஆய்வு செய்து அறிவித்திருந்தன.

#SaveCSK - Fans launch campaign to revoke ban, to meet on August 1

இந்நிலையில்தான், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி லோதா கமிட்டி அளித்த தீர்ப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரு வருடங்கள் ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள், SaveCSK என்ற பெயரில் பேஸ்புக் அக்கவுண்ட் திறந்துள்ளனர். வரும் சனிக்கிழமை, ஆகஸ்ட் 1ம் தேதி, சென்னை ரசிகர்கள், சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்திற்கு வர வேண்டும் என்றும், சென்னை அணி மீதான தடையை நீக்க வலியுறுத்தி அங்கு நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், பேஸ்புக் பக்கத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் ஸ்டேடியம் செல்லும் ரசிகர்கள் மஞ்சள் ஆடையுடன் வருமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடம் பெறப்படும் கையெழுத்து பிசிசிஐக்கு அனுப்பி வைக்கப்படும். சேப்பாக்கம் செல்வதற்கு, இதுவரை 6 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக பேஸ்புக் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன மஞ்சக்கொடியோட ஆரவாரமா கிளம்பிற வேண்டியதுதான..

Story first published: Wednesday, July 29, 2015, 13:59 [IST]
Other articles published on Jul 29, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+