Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே பந்தில் 2 விக்கெட்.. இந்தியாவுக்கு எமனாக மாறிய போலாந்த்.. மண்ணை கவ்விய புஜாரா

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் போலாந்த், அபாரமாக பந்துவீசி இந்திய வீரர்களை திணறடித்து வருகிறார். டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீசியது.

ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

scott Boland destroyed indian batting line up with two identical deliveries

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில், போலாந்து பந்துவீச்சில் ஆப் ஸ்டம்ப் சிதற 13 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில்லுக்கு ஆப் ஸ்டம்பை குறிவைத்து போலாந்து வீச, அதனை சரியாக கணிக்காமல், பந்தை தடுக்காமல் விட்டார். அது கில்லின் ஸ்டம்பை பதம் பார்த்தது.

இதனையடுத்து, இந்திய அணியின் அனுபவ வீரரும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய புஜாராவுக்கும், போலாந்த் அதே மாதிரி ஒரு பந்தை வீசினார். ஆஃப் ஸ்டம்ப் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் நின்று பந்தை கணிக்காமல் விட்டார்.

இதனால் போலாந்த் வீசிய பந்து புஜாராவின் ஆப் ஸ்டம்பை பிதம் பார்த்தது. அனுபவ வீரரான புஜாரா, இந்த தவறை செய்வார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று ரவி சாஸ்த்ரி கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய ஹர்சா போக்லேவும், புஜாரா ஆட்டமிழந்த முறையை அவரே பார்த்தால், மிகவும் ஏமாற்றம் அடைவார் என்று குற்றஞ்சாட்டினார்.

இந்திய வீரர்கள் பந்தை ஸ்விங் செய்ய பந்தை லைன் மற்றும் லெங்தில் வீசினர். ஆனால், அஸ்திரேலிய வீரர் போலாந்து ஆப் ஸ்டம்பை சுற்றியே பந்தை தொடர்ந்து வீசி கொண்டு இருந்தார். இதில் ஒரே மாதிரி பந்தில், கில் மற்றும் புஜாரா ஆகியோரை போலாந்து வீசினார். இதனால் 50 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Thursday, June 8, 2023, 20:56 [IST]
Other articles published on Jun 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+