ஐபிஎல் ஏலத்தின் இரண்டாம் நாள்... என்னனென்ன சுவாரசியங்கள் இருக்கிறது தெரியுமா?
Recommended Video

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. நேற்று முதல் நாள் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.
பல சுவாரசியமான சம்பங்கள் நேற்று நடந்தது. அதைவிட பல முக்கியமான சம்பவங்கள் இன்று நடக்க இருக்கிறது.
முக்கியமாக சில வீரர்கள் இன்றுதான் ஏலத்திற்கு வர இருக்கிறார்கள். தமிழக வீரர்களும் இன்று ஏலம் எடுக்கப்படுவார்கள்.

முதல் ஏலம்
ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 578 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் 300 பேர் இந்தியர்கள். இதில் முதல் நாள் ஏலத்தில் 110 பேர் கலந்து கொண்டார்கள். இதில் 78 பேர் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்டனர். இதில் 49 பேர் இந்திய வீரர்கள், 29 வீரர்கள் வெளிநாட்டினர்.

இரண்டாம்
இன்று இரண்டாம் நாள் ஏலம் நடக்க இருக்கிறது. 468 பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் இந்திய வீரர்கள் அதிகம் இருப்பார்கள். 251 இந்திய வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். மேலும் 217 வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

முக்கியமானவர்கள்
நேற்றைய ஏலத்தில் மலிங்கா, முரளி விஜய், அம்லா, கெயில் ஆகிய முக்கியமான வீரர்கள் ஏலம் எடுக்கப்படாமல் போனார்கள். இவர்களை இன்று ஏதாவது ஒரு அணி பாதி விலைக்கு வாங்கும் என்று கூறப்படுகிறது. அந்த முக்கியமான வீரர்கள் இன்று அதிக விலைக்கு கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது.

தமிழன்ஸ்
இன்று அதேபோல் தமிழக வீரர்கள் நிறைய பேர் ஏலத்திற்கு வர இருக்கிறார்கள். நிறைய ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடிய வீரர்களும் ஏலத்திற்கு வர உள்ளனர். அதனால் இன்றைய நாள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications