For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“போக்கிரி சாமியாய் ஜடேஜா”.. சமூக அக்கறைக்காக வித்தியாச முயற்சி.. புஷ்பா ஃபீவர் கலக்கல் புகைப்படங்கள்

பெங்களூரு: புஷ்பா திரைப்படத்தின் மீது அதிக ஈர்ப்பை பெற்ற ரவீந்திர ஜடேஜா, அதற்காக தனது கெட்டப்பையே மாற்றியுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படம் நாடு முழுவதும் படு மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அதில் வரும் பஞ்ச் வசனங்களுக்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது.

ரசிகர்களால் கவரப்பட்ட இந்த திரைப்படம், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவையும் விட்டுவைக்கவில்லை.

புஷ்பா திரைப்பட மோகம்

புஷ்பா திரைப்பட மோகம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜா "புஷ்பா.. புஷ்பராஜ்" என்று தொடங்கும் பஞ்ச் டயலாக்கிற்கு நடித்து வீடியோவை வெளியிட்டிருந்தார். இது நம்ம ஜடேஜாவா என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் மீதான மோகத்தால் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.

கலக்கல் புகைப்படங்கள்

கலக்கல் புகைப்படங்கள்

அல்லு அர்ஜுனின் தோற்றத்தை போன்றே ஹேர்ஸ்டைல், தாடி, உடை என அனைத்தையும் மாற்றிக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படமும் இணையத்தை தெரிக்கவிட்டு வருகிறது. மேலும் அதில், "புஷ்பானா ஃப்ளவர்னு நினச்சியா.. ஃபையர் என" வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக அக்கறை

சமூக அக்கறை

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஜடேஜா, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தயங்கவில்லை. அந்த புகைப்படத்தில் ஜடேஜா பீடியை வாயில் வைத்திருப்பது போன்று உள்ளது. இதற்கு அவர், " கிராப்பிக் காட்சிகளுக்காக மட்டுமே புகைப்பிடிப்பது போன்று உள்ளது. நிஜமாக நான் ஒன்றும் புகைப்பிடிக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Recommended Video

Jadeja trolls KKR after 'masterstroke' Tweet against Dhoni | OneIndia Tamil
ஜடேஜாவுக்கு என்ன ஆனது

ஜடேஜாவுக்கு என்ன ஆனது

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக உள்ள ரவீந்திர ஜடேஜா, கடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓய்வில் இருக்கும் அவர், ரசிகர்களை உற்சாகப்படுத்த சமூக வலைதளங்களில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். தென்னாப்பிரிக்க தொடர் முடிவதற்குள் அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 13, 2022, 10:15 [IST]
Other articles published on Jan 13, 2022
English summary
Ravindra Jadeja recreates his look like Allu Arjun’s Pushpa movie, see the photos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+