இந்தியா தோற்றதற்கு இதுதான் காரணம்.. "பிம்பிளிக்கி பிளாப்பி" சொல்வதைக் கேளுங்க!
சென்னை: இந்திய அணி, வங்கதேச டூரில் தோல்வியைத் தழுவியதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணத்தைச் சொல்கிறார்கள். கோஷ்டிப் பூசலே முக்கியக் காரணம் என்பது சமீப காலமாக வலுத்து வரும் ஒரு முக்கியக் காரணம்.
இந்த நிலையில் நமது வாசகர் ஒருவர் ஒரு கருத்தை வைத்துள்ளார். அந்தக் கருத்தும் சற்று கருத்தாகத்தான் உள்ளது. வாங்க படிப்போம்...
"டோனி சொல்லும் சிலரை கண்முடித்தனமாக டீமில் சேர்ப்பது தவறு.

சீனியர் வீரர்களை ஒதுக்குவது நல்லது இல்லை. கம்பீர், யுவராஜ், சேவாக், இர்பான் பதான், நேஹ்ரா, ஷாகிர் கான் போன்ற வீரர்கள் அனுபவம் நமக்கு தேவை.
இளம் வீரர்கள் அணிக்கு தேவை ஷிகார் தவன், ரகானே போன்ற வீரர்கள் தேர்வு பாராட்ட கூடியது. அதே நேரம் ஒரு மேட்சில் நன்றாக விளையாடிவிட்டு பல மேட்சில் ரன் அடிக்காமல் இருக்கும் ரோஹித் ஷர்மா, கோஹ்லி போன்ற வீரர்களை நிரந்தரமாக தேர்வு செய்வது தவறு.
ஜடேஜாவுக்கு தொடர்ந்து இடம் கொடுத்து கொண்டு இருப்பது வேதனை. அவனை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்று புரியவில்லை
மிடில் ஆர்டர் பலமாக இருக்க வேண்டும். பௌலிங் இன்னும் பலப்படுத்த வேண்டும். பங்களாதேஷ் விட நாம் பௌலிங் ரொம்ப கேவலமாக இருந்தது மறுக்க முடியாத உண்மை.
இதுவே நாம் தோல்வி காரணம்."
இந்தக் கருத்தைக் கொடுத்திருப்பவர் பெயர் "பிம்பிளிக்கி பிளாப்பி"...! நன்கு "கருத்தாக" பேசும் இவர் நிஜப் பெயரிலேயே கருத்தை பதிவிட்டிருக்கலாம்!


Click it and Unblock the Notifications