போச்சு எல்லாம் போச்சு... எஸ்ஆர்எச் சிஇஓவோட கோபமான ரியாக்ஷன்... வைரலான வீடியோ
சென்னை : நேற்றைய தினம் எஸ்ஆர்எச் மற்றும் ஆர்சிபி இடையிலான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்ஆர்எச் தோல்வி அடைந்துள்ளது.
வெற்றியை நோக்கி சென்ற எஸ்ஆர்எச் அணியின் அடுத்தடுத்த 6 விக்கெட்டுகள் வீழ்ச்சி அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
அணிக்கு தேவையான நேரத்தில் மணிஷ் பாண்டேவின் விக்கெட் வீழ்ந்தது. இதையடுத்து அந்த அணியின் சிஇஓவின் கோபமான ரியாக்ஷன் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

6வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 6வது போட்டி சென்னையில் எஸ்ஆர்எச் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி 150 ரன்களை இலக்காக எதிரணிக்கு கொடுத்தது. ஆனால் தொடர்ந்து ஆடிய எஸ்ஆர்எச் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வி கண்டது.

கோட்டைவிட்ட எஸ்ஆர்எச்
எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியை கோட்டை விட்டது எஸ்ஆர்எச். அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 54 ரன்களை அடித்திருந்தார். ஆயினும் போட்டியில் எஸ்ஆர்எச் தோல்வி கண்டது. இறுதி 4 ஓவர்களில் போட்டியின் போக்கு மாறி ஆர்சிபிக்கு சாதகமானது. ஆர்சிபி பௌலர் ஷாபாஸ் அகமது ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விமர்சனங்களுக்கு உள்ளான பாண்டே
இந்த போட்டியின் தோல்விக்கு எஸ்ஆர்எச் வீரர் மணிஷ் பாண்டே தான் காரணம் என்று ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர். அணியின் முக்கியமான நேரத்தில் பந்துகளை கவனமாக கையாண்டிருக்க வேண்டிய சூழலில் அவர் அவுட்டானது அனைவரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அதிர்ச்சியான சிஇஓ
இந்த போட்டியில் எஸ்ஆர்எச் வீரர் மணிஷ் பாண்டே ஷாபாஸ் அகமதுவின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடி அவுட்டான நிலையில், அந்த அணியின் சிஇஓ காவ்யா மாறன், மிகுந்த அதிர்ச்சியான ரியாக்ஷனை காட்டியுள்ளார். மேலும் அவர் தனது தலையில் கையை வைத்துக் கொண்டு ரியாக்ட் செய்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications