டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டனாக சேவாக் நியமனம் : 3வது தடவையாக கேப்டன் பதவி
டெல்லி: ஐபிஎல்-4 சீசனுக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக வீரேந்திர சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது சோவாக் தான் டெல்லி டேர்டெவிலிஸ் கேப்டனாக இருந்தார். பின்னர் பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்பியதால் சேவாக் தனது கேப்டன் பதவியை கம்பீரிடம் கொடுத்தார்.
ஆனால் இந்த சீசனில் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடவிருக்கிறார். அதனால் கேப்டன் பதவி மீண்டும் சேவாக்கிடம் வந்து சேர்ந்துள்ளது.
இது குறித்து வீரேந்திர சேவாக் பிடிஐக்கு தெரிவித்ததாவது,
எனக்காக டெல்லி டேர்டெவில்ஸைத் தவிர ஐபிஎல்லில் வேறு எந்த அணியும் இருக்க முடியாது. நான் டெல்லி அணியை வழிநடத்துவதில் சந்தோஷம் அடைகிறேன் என்றார்.
டெல்லி அணியில் இருந்த திலகரத்னே தில்ஷன், டீ வில்லேர்ஸ், டிர்க் மற்றும் டேனியல் வெட்டோரி ஆகிய பெரிய வீரர்கள் கூண்டோடு பெங்களூர் அணிக்குச் சென்றுவிட்டனர்.


Click it and Unblock the Notifications