டோணி ஓய்வு பற்றி மூச்சு விட மறுக்கும் சேவாக், யுவராஜ்சிங்!
டெல்லி: டோணியின் டெஸ்ட் ஓய்வு குறித்து கருத்து தெரிவிக்க சேவாக், யுவராஜ் சிங் போன்ற முன்னணி வீரர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

அதிரடி ஆட்டக்காரர்களான சேவாக், யுவராஜ் சிங், முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா போன்றோர் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டனர். இதற்கு கேப்டன் டோணிதான் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில், டோணியின் ஓய்வு முடிவு குறித்து நிருபர்கள் சேவாக்கிடம் கேட்டதற்கு, உலகத்துக்கே தெரிந்த விசயத்தை பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது என்று பதிலளித்தார்.
ஆனால் நெஹ்ரா, யுவராஜ், ஹர்பஜன்சிங் ஆகியோர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
Story first published: Thursday, January 1, 2015, 6:35 [IST]
Other articles published on Jan 1, 2015


Click it and Unblock the Notifications