Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் அடிச்சு சொல்றேன்.. சச்சினோட இந்த சாதனையை கோலியால் தாண்ட முடியாது.. எதை சொல்கிறார் சேவாக்?

Recommended Video

சச்சினோட இந்த சாதனையை கோலியால் தாண்ட முடியாது : சேவாக் உறுதி- வீடியோ

மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதனை மேல் சாதனையாக முறியடித்து வருகிறார்.

உச்சகட்டமாக அதி விரைவாக ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை செய்தார்.

முன்னதாக சச்சின் தான் அதிவிரைவாக பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்று இருந்தார். அதை முறியடித்தார் கோலி.

தலை கீழாக மாறிய கணக்கு

தலை கீழாக மாறிய கணக்கு

இந்த நிலையில், கிரிக்கெட் உலகில் அனைத்து பேட்டிங் சாதனைகளையும் கோலி முறியடிப்பார் என்ற பேச்சு கிளம்பி உள்ளது. இன்னும் சொல்லப் போனால் எந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது என கணக்கு சொல்லும் நிலைக்கு வந்து விட்டது கிரிக்கெட் உலகம்.

ஸ்டீவ் வாஹ் சொன்னது என்ன?

ஸ்டீவ் வாஹ் சொன்னது என்ன?

முன்பு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ் கோலி குறிப்பிட்ட ஒரு சாதனையை தவிர கோலி அனைத்து பேட்டிங் சாதனைகளையும் முறியடிப்பார் என கூறி இருந்தார்.

[ கோலி ஒரு சாதனை தவிர அனைத்தையும் முறியடிப்பார்.. ஸ்டீவ் வாஹ் சொல்லும் அந்த ஒன்று என்ன?]

கோலியால் 200 டெஸ்ட் ஆட முடியுமா?

கோலியால் 200 டெஸ்ட் ஆட முடியுமா?

தற்போது சேவாக் தன் பங்குக்கு ஒரு சாதனையை கோலி முறியடிக்க மாட்டார் என கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த சாதனையை கோலியால் முறியடிக்க முடியாது. காரணம், இதை முறியடிக்க ஒருவர் 24 ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என கூறியுள்ளார் சேவாக். இது பலருக்கும் தெரிந்த ஒன்று தான் என்றாலும் சச்சினின் தீவிர விசிறியும், சக கிரிக்கெட் வீரரும், நண்பருமான சேவாக் இதை சொல்லி இருப்பதால் தனி கவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் சச்சின் நீண்ட காலம் கிரிக்கெட் ஆடியது கூட ஒரு சாதனையே என வலியுறுத்தி இருக்கிறார் சேவாக்.

சரிவை சந்திக்காத கோலி

சரிவை சந்திக்காத கோலி

மேலும் சேவாக் கூறுகையில், "நான் டெண்டுல்கர், கங்குலி, லக்ஷ்மன், டிராவிட் உள்ளிட்ட வீரர்களோடு கிரிக்கெட் ஆடியுள்ளேன். அவர்கள் எல்லோரும் கிரிக்கெட்டில் உச்சத்தையும், சரிவையும் சந்தித்துள்ளார்கள். ஆனால், கோலி அதை இன்னும் சந்திக்கவில்லை" என கூறியுள்ளார்.

Story first published: Tuesday, November 13, 2018, 20:39 [IST]
Other articles published on Nov 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+