வாழ்க்கை ஒரு வட்டம்.. போன வருசம் திமிராக நடந்து கொண்ட ஷாகின் ஆப்ரிடி.. இன்று பதிலடி கொடுத்த இந்தியா
மெல்போர்ன் : டி20 உலககோப்பையில் இந்திய அணிக்கு ஆபத்து தரப் போகிறார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஆப்ரிடி, இம்முறை நன்றாக வாங்கி கட்டி கொண்டார்.
ஆப்ரிடி வந்தால் அவ்வளவு தான். ஆப்ரிடியை பார்த்து இந்திய வீரர்கள் பயப்படுகின்றனர் என்று பலரும் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்தனர்.

கடந்த முறை தோல்வி
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் ஷாகின் ஆப்ரிடி வீசிய பந்த, பேட்ஸ்மேனின் காலை பதம் பார்த்தது. இதனை வைத்தும் குறிப்பாக ரோகித் சர்மா வைத்து அனைத்து தரப்பு ரசிகர்களும் மீம்ஸ் போட்டு வெறுப்பேற்றினர்.

3 விக்கெட்
இதற்கு காரணம், கடந்த முறை பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலககோப்பையில் ஷாகின் ஆப்ரிடி வீசிய பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டாகினார். இதே போன்று கேஎல் ராகுல் 3 ரன்களிலும், விராட் கோலியையும் ஆட்டமிழக்க செய்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு பெரும் சரிவை தந்தது.

வெறுப்பேற்றிய ஆப்ரிடி
இது ஷாகின் ஆப்ரிடியின் திறமையாக இருந்தாலும், அதன் பிறகு அவர் இந்திய வீரர்களை ஆட்டமிழக்க செய்ததை, ரசிகர்களிடம் நடித்து காட்டி வெறுப்பேற்றினார். இந்த நிலையில், சரியாக ஒரு ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற டி20 உலககோப்பையில் ஷாகின் ஆப்ரிடியின் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டை இழக்கவில்லை.

பதிலடி தந்த இந்தியா
ஷாகின் ஆப்ரிடியின் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் 4 பவுண்டரிகளை அடித்து நெருக்கடி இல்லாமல் விளையாடினார். இதனால் ஷாகின் ஆப்ரிடியின் உத்வேகம் நொறுங்கியது. பாகிஸ்தான் தோல்வி அடைந்ததற்கு ஷாகின் ஆப்ரிடியும் காரணமாக இருந்ததால் அவர் சோகமாக இருந்தார். இந்த நிலையில், கடந்த முறை துள்ளி குதித்ததையும், இம்முறை சோகமாக நின்ற புகைப்படத்தையும் போட்டு திறமை இருந்தால போதாது அடக்கம் வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications