ஐபிஎல் விருந்தில் ஷாருக், மாதுரி ஆட்டம்
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க விழாவில் ஷாரூக், மாதுரி நடனம் ஆடுவார்கள் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவுடன் தொடங்கும்.
இதில் கலை நிகழ்ச்சி, ஆடல், பாடல் இடம் பெறும். பல திரையுலக நட்சத்திரங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பிப்பார்கள்.

விருந்து நிகழ்ச்சி
ஆனால், இந்த முறை தொடக்க விழாவுக்கு பதிலாக விருந்து நிகழ்ச்சி நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குளறுபடியைத் தவிர்க்க
கொஞ்ச நாட்களாக ஏற்பட்டுள்ள குளறுபடிகளைத் தவிர்க்கவே தொடக்க விழா, விருந்து நிகழ்ச்சியாக மாற்றப் பட்டிருக்கலாம் என தெரிவிக்கப் படுகின்றது.

பாலிவுட் நட்சத்திரங்கள்
இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், மாதுரி தீட்சித் நடனம் ஆடுவார்கள் என்று தெரிகிறது.

பேசி வருகிறார் ஷாருக்
இந்த நிகழ்ச்சிக்காக ஷாரூக்கான் பிரபல நடிகர், நடிகைகளிடம் பேசி வருகிறாராம்.
Story first published: Friday, April 11, 2014, 18:04 [IST]
Other articles published on Apr 11, 2014


Click it and Unblock the Notifications