சாய் ஹோப் பேட்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய நம்பிக்கை வந்துள்ளது.. சந்தர்பால் பாராட்டு
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் வரிசையில் ஷாய் ஹோப் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளதாக சந்தர்பால் பாராட்டியுள்ளார். இந்திய சுற்றுப்பயணத்தில் அனைத்து வகை போட்டிகளிலும் அசத்திய ஹோப், தனது தொழில்நுட்ப முறைகளை மாற்றாமல் ஆட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக, குறிப்பாக புரோவிடென்ஸ் மைதானத்தின் கடினமான ஆடுகளங்களில் விளையாடிய அனுபவமே ஹோப்பின் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று சந்தர்பால் கூறினார். "கயானாவில், குறிப்பாக புரோவிடென்ஸ் மைதானத்தில் உங்களால் தொடர்ந்து ரன்கள் சேர்க்க முடிகிறது என்றால், உலகத்தில் எந்த மைதானத்திலும் உங்களால் ரன் குவிக்க முடியும்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளவும் பல்வேறு பந்துவீச்சு முறைகளுக்கு ஏற்ப மாறவும் இந்த அனுபவம் உதவுகிறது என்றும் அவர் விளக்கினார். ஷிம்ரான் ஹெட்மயர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், குடாகேஷ் மோட்டி மற்றும் ஷமர் ஜோசப் ஆகிய வீரர்களின் பங்களிப்பையும் சந்தர்பால் சுட்டிக்காட்டினார்.
தொடக்கத்தில் நிதானமாக ஆடுபவர் என்று கருதப்பட்ட ஹோப், தற்போது சுலபமாகவும் நம்பிக்கையுடனும் பவுண்டரிகளை அடித்து வருகிறார். காட்டுத்தனமான ஷாட்களை அடிக்காமல், சரியான நேரம், இடைவெளி மற்றும் சரியான ஷாட் தேர்வின் மூலம் அவர் ரன்களை குவித்து வருகிறார்.
"அவர் மைதானத்திற்குச் சென்று கண்மூடித்தனமாக பேட்டைச் சுழற்றுவதில்லை. பந்தை சரியாக கணித்து, இடைவெளிகளைக் கண்டறிந்து பவுண்டரிகளை அடிக்கிறார்" என்று ஹோப்பை சந்தர்பால் பாராட்டினார்.
"நிச்சயமாக! அவர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்த மைதானத்திலும் போட்டிகளை வெல்ல முடியும் என்று இப்போது நம்புகிறார்கள். அதைச் செய்தும் காட்டியுள்ளார்கள். வீரர்கள் சில வெற்றிகளைப் பெற்று, தங்களால் முடியும் என்பதை உணர்ந்துவிட்டால், காரியத்தை முடிப்பதற்கு நிச்சயம் தங்களை முழுமையாக நம்புவார்கள்."
இது போன்ற கம்பேக், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பிரதிபலிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது பழைய சீரான ஆட்டத்தைத் தக்கவைக்கச் சிரமப்பட்டு வருகிறது. முடிவுகள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாவிட்டாலும், டெஸ்ட் வீரர்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து வருவதாக சந்தர்பால் சுட்டிக்காட்டினார்.


Click it and Unblock the Notifications


