
முதல் விக்கெட்
டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீராகள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஆவேஷ் கான் ஓவரை, மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் குறிவைத்து அடித்தனர். மறுபக்கம் முகமது சிராஜ், இம்முறை கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.. மெயர்ஸ் 23 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். இதனையடுத்து தீபக் ஹூடா வீசிய முதல் பந்திலேயே மெயர்ஸ் அவரிடம் பிடிப்பட்டார்.

தடுமாறிய நடுவரிசை
வேகப்பந்துவீச்சை இருவரும் சிறப்பாக கையாண்டதை அறிந்த ஷிகர் தவான், உடனே சுழற்பந்துவீச்சைளர்களை பயன்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சாஹல், அக்சர் பட்டேல், ஹூடா ஆகியோர் தங்கள் பந்துவீச்சு மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை கட்டுப்படுத்தினார். கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசிய பிராண்டன் கிங், இந்த ஆட்டத்தில் சாஹல் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.

6 சிக்சர்
புருக்ஸ் தன் பங்கிற்கு 35 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து கேப்டன் பூரான் மற்றும் ஹோப் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சுழற்பந்துவீச்சாளர்கள் ஓவரை சிக்சருக்கு விரட்டிய பூரான், 77 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார். இதில் 6 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும்.

100வது போட்டியில் சதம்
சிறப்பாக விளையாடிய ஹோப்ஸ் சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் போவெல் 13 ரன்களும், ரோமேரியோ 15 ரன்களும் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications











