அவருக்கு தான் பெரிய கிரிக்கெட்டருன்னு நினைப்பு.. !! இப்போ பாத்தீங்கல்ல.. அரெஸ்ட் வாரண்ட்..!!
Recommended Video
மும்பை: நீதிமன்ற உத்தரவு மீதும், நீதித்துறை மீதும் மிகுந்த நம்பிக்கையும், பெருமிதமும் கொள்கிறேன் என்று வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஜஹான் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பவுலர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் கடந்தாண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுகள் இந்திய கிரிக்கெட் உலகை அதிர வைத்தன.
அதாவது, முதலில் ஷமிக்கு பேஸ்புக் பக்கத்தில் பல்வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளது. அதை தான் தட்டிக் கேட்டேன். ஆனால், அவரோ என்னை சரமாரியாக அடித்து துன்புறுத்தினார், கொடுமைப்படுத்தினார் என்று புகார் தெரிவித்திருந்தார்.

அதிரடி தகவல்கள்
அத்துடன் ஷமி பல்வேறு பெண்களுடன் இருக்கும் புகைப் படங்களையும் அவர் அனுப்பிய மெசேஜ்களின் தொகுப்புகளையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட தகவல்களும், அது தொடர்பான செய்திகளும் பகீர் கிளப்பியது. கிரிக்கெட் உலகம் அதிர்ந்து மிரண்டது.

போலீசில் புகார்
கொல்கத்தா காவல்நிலையத்தில் ஷமி மீது மனைவி புகார் ஒன்றையும் அளித்து இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்திருந்தது தனிக்கதை. அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.

அரெஸ்ட் வாரண்ட்
அந்த வழக்கு அலிபூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமதுவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் 15 நாட்களுக்குள் ஷமி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

நீதி வேண்டி போராட்டம்
இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் கூறி இருப்பதாவது: நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன். ஓராண்டுக்கு மேலாக, நீதி வேண்டி போராடுகிறேன். தான் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்ற மமதையிலும், அனைவரையும் விட மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் ஷமி நினைத்து கொண்டிருக்கிறார் என்றார்.

கைது நடவடிக்கை?
தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில், ஷமி உள்ளார். அந்த தொடரும் முடிவடைந்து விட்டது. அவர் எப்போது இந்தியா வருகிறாரோ... அப்போது விமான நிலையத்தில் வைத்து கைது நடவடிக்கையை எடுக்க போலீசார் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications