சர்வதேச போட்டிகளுக்குத்தான் குட் பை.. "காசு தரும்" ஐபிஎல் தொடரில் ஷேன் வாட்சன் ஆடுவார்
மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளபோதிலும், ஐபிஎல் தொடர்களில் ஷேன் வாட்சன் ஆடுவார் என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஷேன் வாட்சன் முதல் தர போட்டியில் தொடருவார். அவரை ஐபிஎல் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த ஆண்டு ரூ.9.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
எனவே ஐபிஎல் உள்ளிட்ட முதல்தர போட்டிகளில் வாட்சன் தொடருவார் என்று எதிர்பார்க்கலாம்.
Story first published: Friday, March 25, 2016, 11:11 [IST]
Other articles published on Mar 25, 2016


Click it and Unblock the Notifications