Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதோ சென்னைக்கு யூத்தான வீரர்.. ஷர்த்துல் தாக்குரை பாக்கெட்டுக்குள் போட்ட சிஎஸ்கே!

Recommended Video

புது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இரண்டு வருடம் கழித்து மீண்டும் போட்டிக்கு திரும்பி வந்து இருக்கிறது.

சென்னை அணி மிகவும் வித்தியாசமான அணியை எடுத்துக் கொண்டு இருக்கிறது. நேற்றில் இருந்து அணியில் மிகவும் வித்தியாசமான வீரர்கள் எடுக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது சென்னை அணிக்கு ஷர்த்துல் தாக்குர் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் இந்திய அணியில் பந்து வீச்சாளராக இருந்தவர்.

யார் இவர்

யார் இவர்

ஷர்த்துல் தாக்குர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். வலது கை பேட்டிங் மற்றும் வலது கை பவுலிங் செய்யக்கூடியவர். இவர் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

வரலாறு

இவர் ஐபிஎல் போட்டியில் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது புனே அணிக்காக ஆடினார். இவர் டோணியின் செல்லபிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் தற்போது அணியில் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

வாங்கியது

வாங்கியது

ஷர்த்துல் தாக்குர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 2.60 கோடி கொடுத்து ஷர்த்துல் தாக்குர் ஏலம் எடுக்கப்பட்டார். இவரை பெரிதாக எந்த அணியும் கேட்கவில்லை.

இளமையானவர்

இளமையானவர்

தற்போது சென்னையில் இருக்கும் இளமையான வீரர் இவர்தான். இதற்கு முன் ஜடேஜா 29 வயதுடன் இளம் வீரராக இருந்தார். இவருக்கு 26 வயது ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 28, 2018, 12:25 [IST]
Other articles published on Jan 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+