Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட்ரா சக்க.. அதிரடி தமிழக வீரருக்கு மீண்டும் வாய்ப்பு - 5.25 கோடிக்கு இப்போதான் வேலை வந்திருக்கு

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்று பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.1) நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

 பஞ்சாப் vs கொல்கத்தா

பஞ்சாப் vs கொல்கத்தா

ஐபிஎல் 2021 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 11 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக பிளே ஆஃப் முன்னேறியுள்ளது. நேற்று ஹைதராபாத்தை வீழ்த்தி பிளே ஆஃப் முன்னேறியது சென்னை. இந்நிலையில், துபாயில் இன்று மிக முக்கியமான போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா மோதுகின்றன.

 வலிமையான ரன் ரேட்

வலிமையான ரன் ரேட்

புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள கொல்கத்தா 11 போட்டிகளில் 5ல் வெற்றிப் பெற்றுள்ளது. 6ல் தோற்றுள்ளது. எனினும் +0.363 எனும் நல்ல ரன் ரேட்டை கொல்கத்தா வைத்துள்ளது. மூன்றாமிடம் இடத்தில் இருக்கும் பெங்களூரு அணிக்கு கூட இவ்வளவு வலிமையான ரன் ரேட் கிடையாது. இந்நிலையில், பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் பொருட்டு, பஞ்சாப் மற்றும் கொல்கத்தா என இரு அணிகளும் இன்று மல்லுக்கட்டுகின்றன.

 பஞ்சாப் பிளேயிங் லெவன்

பஞ்சாப் பிளேயிங் லெவன்

கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவனில், ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன் (c), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (w), டிம் சீஃபர்ட், சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், பஞ்சாப் அணியில், KL ராகுல் (w/c), மயங்க் அகர்வால், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 வெறும் 4 வெற்றி

வெறும் 4 வெற்றி

தமிழக வீரர் ஷாருக் கானுக்கு ஒருவழியாக மீண்டும் பஞ்சாப் அணியில் இடம் கிடைத்துள்ளது. 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஷாரூக்கானுக்கு இந்த இரண்டாம் பாதி தொடரில், இப்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிரடி வீரரான ஷாருக் இப்போட்டியில் அசத்த வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் 4 வெற்றிகள் மட்டும் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

Story first published: Friday, October 1, 2021, 22:10 [IST]
Other articles published on Oct 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+