Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற உள்ள தவான்.. சன்ரைசர்ஸ் அணியுடன் தகராறா?

மும்பை : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து ஷிகர் தவான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தவான் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருக்கிறார். அவர் அந்த அணியில் இன்னும் இரண்டு ஆண்டு காலம் வரை இருக்க முடியும்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி அவரை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் விற்கலாம் என வதந்தி பரவி வருகிறது.

வருத்தத்தில் தவான்

வருத்தத்தில் தவான்

சென்ற சீசனில் தவான் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடியிடம் தன்னை ஏன் அணியில் தக்க வைக்காமல் குறைவான மதிப்பில் ஏலத்தில் எடுத்தீர்கள் என வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், கேப்டன் பதவியை தனக்கு அளிக்காதது குறித்தும் அவர் கேள்வி கேட்டதாக அப்போது செய்திகள் வெளி வந்தன.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

2018 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி தனக்கு உள்ள உரிமையை பயன்படுத்தி இரண்டு வீரர்களை தக்க வைத்தது. அவர்கள் டேவிட் வார்னர் மற்றும் புவனேஸ்வர் குமார். வார்னர் 12 கோடிக்கும், புவனேஸ்வர் குமார் 8.5 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டனர்.

மதிப்பு சரிந்தது ஏன்?

மதிப்பு சரிந்தது ஏன்?

தவானை வேறு அணி ஏலத்தில் 5.2 கோடிக்கு எடுத்த பின்னர் அவரை "ரைட் டு மேட்ச்" என்ற வாய்ப்பின் மூலம் வாங்கியது சன்ரைசர்ஸ். தவானை சன்ரைசர்ஸ் அணியே தக்க வைக்கும் என நினைத்த மற்ற அணிகள், அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் அவரது மதிப்பு சரிந்து 5.2 கோடியாக ஆனது.

தவான் வாக்குவாதம்

தவான் வாக்குவாதம்

சன்ரைசர்ஸ் அணியில் வார்னர் 12 கோடி, மனிஷ் பண்டே 11 கோடி, ரஷித் கான் 9 கோடி, புவனேஸ்வர் குமார் 8.5 கோடி என பெரிய விலையை பெற்ற நிலையில், தவான் குறைவாக 5.2 கோடி மட்டுமே பெற்றார். இதன் காரணமாக, வருத்தத்தில் இருந்த தவான், வார்னர் ஆடாத நிலையில் தனக்கு கேப்டன் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்துள்ளார். அதுவும் கேன் வில்லியம்சன் வசம் சென்றவுடன் அப்போது பயிற்சியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸில் தவான்

மும்பை இந்தியன்ஸில் தவான்

இந்நிலையில் தவானை வாங்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. அதிலும் ரோஹித் சர்மா, தவானை தன் அணிக்குள் இழுத்துக் கொள்ள அதிக ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. சன்ரைசர்ஸ் அணியும் அவரை விற்றுவிடும் என்றே தெரிகிறது.

Story first published: Tuesday, October 23, 2018, 15:22 [IST]
Other articles published on Oct 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+