Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷிகர் தவான், ரோகித் ஜோடி படைக்க போகும் 2 சாதனை.. 150வது போட்டியில் கலக்குவாரா தவான்? 4 ஆண்டுகள் கனவு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி புதிய சாதனை ஒன்றை படைக்கப் போகிறது.

Recommended Video

IND vs ENG 1st ODI இந்திய அணி அபார வெற்றி *Cricket

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் வரை இந்த ஜோடி தான் இந்திய ஒருநாள் அணியில் ஆதிக்கம் செலுத்தியது.

பிறகு, கேஎல் ராகுலின் வளர்ச்சியால், தவானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பிறகு சுழற்சி முறை அமலுக்கு வந்தது.

அதிக முறை

அதிக முறை

இதனால், இந்த ஜோடி முன்பு போல் இணைய முடியாமல் போனது. தற்போது அதற்கான மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவுக்காக அதிக முறை சர்வதேச ஒருநள் போட்டியில் இணைந்து விளையாடிய ஜோடிகள் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின், கங்குலி ஜோடி 176 முறை இணைந்துள்ளது. சச்சின், சேவாக் ஜோடி 114 முறை இணைந்து இந்தப் பட்டியலில் 2வது இடத்திலும், ரோகித், தவான் ஜோடி 113 முறை இணைந்து விளையாடி இருக்கிறது.

இன்னும் 6 ரன்கள்

இன்னும் 6 ரன்கள்

இன்றைய ஆட்டத்தின் மூலம், இந்த ஜோடி 2வது இடத்துக்கு முன்னேறும். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில், இந்த ஜோடி தற்போது 4994 ரன்கள் அடித்துள்ளது. தற்போது மேலும் 6 ரன்கள் அடித்தால், தவான், ரோகித் ஜோடி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 5 ஆயிரம் ரன்களை சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைக்கும்.

வெற்றி இல்லை

வெற்றி இல்லை

இதே போன்று ரோகித் சர்மா மேலும் 5 சிக்சர் விளாசினால், சர்வதேச ஒருநாள் போட்டியில் 250 சிக்சர் விளாசிய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்திய அணி SENA என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் தொடரில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒரு தொடரை கூட கைப்பற்றியதில்லை.

வரலாற்றை மாற்றுமா?

வரலாற்றை மாற்றுமா?

இதனால், தவான், ரோகித், கோலி ஜோடிக்கு வயதாகி வருகிறது. இதுவே இங்கிலாந்தில் அவர்கள் கடைசியாக இணைந்து விளையாடும் சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கலாம். இதனால் இந்திய அணியின் மூவேந்தர்கள், இந்த சோக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

Story first published: Tuesday, July 12, 2022, 15:32 [IST]
Other articles published on Jul 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+