Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

600 ரன்களை குவித்த டெல்லி கேபிடல்ஸ் வீரர்... ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி சாதனை!

அபுதாபி : ஐபிஎல் 2020 சீசனில் 600 ரன்களை கடந்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் சாதனை புரிந்துள்ளார்.

மேலும் தொடர்ந்து ரன் குவிக்கும் வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார் ஷிகர் தவான்.

நேற்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் 50 பந்துகளில் 78 ரன்களை குவித்து அதகளம் செய்தார் தவான்.

சாதனை ஆட்டம் பதிவு

சாதனை ஆட்டம் பதிவு

டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரர்களின் ஒருவராக ஷிகர் தவான் உள்ளார். அந்த அணியின் வெற்றிப் பயணங்களில் இவரது பங்கு கண்டிப்பாக இருக்கும். இந்நிலையில் நேற்றைய 2வது தகுதிச்சுற்று போட்டியிலும் தன்னுடைய சாதனை ஆட்டத்தை பதிவு செய்துள்ளார் தவான்.

600 ரன்களை கடந்து சாதனை

600 ரன்களை கடந்து சாதனை

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 50 பந்துகளில் 78 ரன்களை குவித்து அந்த அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தார் ஷிகர் தவான். நேற்றைய போட்டியின்மூலம் இந்த தொடரில் 603 ரன்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

2வது வீரராக சாதனை

2வது வீரராக சாதனை

இந்த சாதனையை படைத்துள்ள அணியின் இரண்டாவது வீரராக உள்ளார் தவான். முன்னதாக ஒரே சீசனில் ரிஷப் பந்த் 600 ரன்களுக்கு மேல் குவித்துரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தவானின் இந்த சாதனைக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.

அதிக ரன் குவிப்பு

அதிக ரன் குவிப்பு

ஐபிஎல் 2020 சீசனில் அதிக ரன் குவித்த வீரர்களில் கேஎல் ராகுலை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார் ஷிகர் தவான். மேலும் எப்போதும் ரன் குவிக்கும் ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் ஷிகர் தவான்.

4வது இடத்திற்கு முன்னேற்றம்

4வது இடத்திற்கு முன்னேற்றம்

அதிக ரன் குவித்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் 175 போட்டிகளில் விளையாடி 5182 ரன்களை குவித்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் தவான். ரோகித் சர்மா 199 போட்டிகளில் விளையாடி 5162 ரன்களுடன் 5வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். இந்த பட்டியலில் 192 போட்டிகளில் விளையாடி 5878 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி.

Story first published: Monday, November 9, 2020, 13:30 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+