தொடர்ந்து சொதப்பும் அந்த சீனியர் வீரர்..! நாளைய போட்டியிலும் தொடர்ந்தால் கல்தா கட்டாயம்..!!
போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து சொதப்பி வரும் தவான், கடைசி ஒரு நாள் போட்டியில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2 வது போட்டியில் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது.
3வது போட்டி நாளை போர்ட் ஆப் ஸ்பெய்னில் நடக்கவுள்ளது. அந்த போட்டியிலும் வென்று ஒருநாள் தொடரை வெல்ல இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்த போட்டியில் வென்றால் தொடர் சமனாகும். எனவே வெஸ்ட் இண்டீசும் பல திட்டங்களுடன் காத்திருக்கிறது.

விறுவிறுப்பான போட்டி
எனவே, இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் சில முக்கிய வீரர்கள் அருமையான இன்னிங்சை தர வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அந்த வரிசையில் முதலில் இருப்பவர் மீசை முறுக்கி வீரர் தவான்.

சொதப்பல் நாயகன்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் படு சொதப்பல் வீரர் என்றால் அது தவான் தான். ஏன் என்றால் அவர் எடுத்த ரன்கள் அப்படித் தான் சொல்கின்றன. மொத்தம் 29 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

2 ரன்கள் தான்
தவான் டி20 போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. 3 டி 20 போட்டிகளில் முறையே 1, 23, 3 ரன்கள் மட்டுமே அடித்தார். 2வது ஒருநாள் போட்டியில் அவரின் தடுமாற்றம் தெரிந்தது. அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்தார்.

டெஸ்டில் இல்லை
இந்த ஒருநாள் தொடருக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடர் இருக்கிறது. ஆனால், டெஸ்ட் அணியில் தவான் கிடையாது. எனவே தமது திறமையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார் தவான்.

தவான் செய்வாரா?
ஒவ்வொரு முறையும் இதுபோன்று பார்ம் அவுட்டாகி இருக்கும் கால கட்டத்தில் அவர் மீண்டு எழுவார். கடந்த காலங்களில் பல தொடர்களில் இப்படி தான் நடந்திருக்கின்றன. இந்த முறையும் தம்மை மெருகேற்றி தனக்கான இடத்தை தவான் தக்க வைத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications