கான்பூர்: கான்பூர் இறுதி ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் நடப்பாண்டில் 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷிகர் தவான்.
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணியின் ஷிகர் தவான், 74 பந்துகளில் சதமடித்தார்.
இதன்மூலம் இந்த ஆண்டில் 5 சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார். மேலும் குறுகிய காலத்தில் 5 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் உபுல் தரங்காவுடன் இணைந்துள்ளார்.