Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன ஷிம்ரன் இது எல்லாம் ? இது எல்லாம் ஒரு காரணமா ? டி20 உலககோப்பையிலிருந்து ஹேட்மயர் நீக்கம்

பார்பிடாஸ் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷிம்ரன் ஹேட்மயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்கிறது. மேலும், இந்த தொடருக்கு தயாராகும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுடன் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ஷிம்ரன் ஹேட்மயர் டிக்கெட்

ஷிம்ரன் ஹேட்மயர் டிக்கெட்

இந்த நிலையில், தமக்கு குடும்ப பிரச்சினை இருப்பதால் தன்னுடைய டிக்கெட்டை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி மாற்றி கொடுங்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹேட்மயர் கூறியுள்ளார். இதனை ஏற்று கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், அவருக்கு மட்டும் வேறு டிக்கெட்டை மாற்றி கொடுத்துள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதியும் தம்மால் வர முடியாது என்று ஹேட்மயர் கூறி இருக்கிறார். இதனால் கடுப்பான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், அக்டோபர் 3ஆம் தேதி தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும். இல்லை என்றால் உலககோப்பை தொடரிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்று கூறி இருந்தது.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

ஆனால், ஹேட்மயர் அக்டோபர் 3ஆம் தேதி விமானத்தில் வரவில்லை. இதனைத் தொடர்ந்து ஹேட்மயரை டி20 உலககோப்பை அணியிலிருந்து நீக்கிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், புருக்ஸை அணியில் சேர்த்துள்ளது. கரேபியன் லீக் டி20 தொடரில் குவாலிபையர் 2 ஆட்டத்தில் புருக்ஸ் 109 ரன்களை விளாசினார்.

பேரிழப்பு

பேரிழப்பு

ஏற்கனவே ஆண்டிரு ரஸில், நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன், அதிரடி ஆல்ரவுண்டர் ஃபெபியன் ஆலன், ஹைடன் வால்ஸ் , அதிரடி ஆல்ரவுண்டர் ரோமேரியோ செஃப்ர்ட் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஹேட்மயரும் இல்லாதது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பேழிப்பு ஏற்பட்டுள்ளதாக கேப்டன் நிக்கோலஸ் ழுரான் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 4, 2022, 18:04 [IST]
Other articles published on Oct 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+