Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய கட்டத்தில் காலை வாரிய சிவம் துபே. அடுத்தடுத்து 2 விக்கெட் விழுந்ததால் சரிவு.. காரணம் என்ன?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்சர் அடித்த துபே, இன்றைய குவாலிபையரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் ன எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முக்கிய கட்டத்தில் காலை வாரி விட்டு சென்றார்.

டாசை இழந்த சிஎஸ்கே, முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய ருதுராஜ் மற்றும் கான்வே ஆகியோர் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ருதுராஜ் டக் அவுட்டான நிலையில், அது நோ பால் என கொடுக்கப்பட்டதால் மீண்டும் ஒரு லைப் கிடைத்தது.

Shivam dube failed in important match vs GT in IPL Qualifier

ருதுராஜ் மட்டும் தான் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். பெரிய ஸ்கோர் நோக்கி சிஎஸ்கே செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 44 பந்துகளில் ருதுராஜ் 60 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கே அணி 10.3வது ஓவரில் தனது முதல் விக்கெட்டை இழந்தது.

இதனையடுத்து நடப்பு சீசனில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே களம் இறங்கினார். எப்போதும் 10 முதல் 15 ஓவரில் தின் பேட்டிங் செய்யும் அணி தோய்வாக விளையாடும். அந்த தருணத்தில் இறங்கும் சிவம் துபே அதிரடியாக விளையாடி , சிஎஸ்கே அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சுழற்பந்துவீச்சாளர்களை அதிரடியாக ஆடும் சிவம் துபே , இன்றைய ஆட்டத்தில் 1 ரன் எடுத்த நிலையில், 3வது பந்திலேயே கிளின் போல்ட் ஆனார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது. ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்ததால், சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் தடுமாறி வருகிறார்.

Story first published: Tuesday, May 23, 2023, 21:00 [IST]
Other articles published on May 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+