200 ரன்களுக்கு மேல் போய் இருக்கும்..சிஎஸ்கேக்கு வில்லன் ஆன சிவம் துபே?எதுக்கு பேட்டிங்கில் இருக்காரு
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் கேதார் ஜாதவின் 2.0 போல் இருந்த சிவம் துபே, ரன்கள் அடிக்கும் வேகத்திற்கு பிரேக் போட்டார்.
சிஎஸ்கே அணி விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், அதிரடியாக விளையாடி முதல் 10 ஓவரில் 100 ரன்களை கடந்தது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கே 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் சிஎஸ்கே 178 ரன்கள் தான் எடுத்தது.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் ராயுடு ஆட்டத்தின் 12.5 ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது சிவம் துபே களத்துக்கு வந்த போது 121 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற பலமான நிலையில் இருந்தது. இதனால் ஒவருக்கு 10 ரன்கள் என்றால் கூட 200 ரன்களை சிஎஸ்கே தொட்டு இருக்கும்.
ஆனால் , சிவம் துபே பெரிய ஷாட் அடிக்க பேட்டை சுற்றி கொண்டே இருந்தார். ஆனால் பந்து பேட்டில் படவே இல்லை. இதன் காரணமாக மறுமுனையில் இருந்த ருத்ராஜ்க்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது. தொடர்ந்து சிவம் துபே பேட்டிங்கில் துடுமாறியதால் ஜடேஜாவும் அதிரடியாக விளையாட முயற்சித்து கேட்ச் ஆனார். களத்தில் நீண்ட நேரம் இருந்ததுக்கு சிவம் துபே ஒரு சிக்சர் அடித்தார்.
இதனால் துபேவுக்கு பதில் ராஜவர்த்தன் ஹங்கர்கேகர் அல்லது மிட்செல் சாண்ட்னர். அவ்வளவு ஏன் தீபக் சாஹருக்காவது வாய்ப்பு வழங்கி இருக்கலாம். இது சிஎஸ்கே அணிக்கு பெரிய சரிவை ஏற்படுத்திவிட்டது. இதில் சிஎஸ்கே தோற்றால் சிவம் துபேவை தான் ரசிகர்கள் பொளப்பாக்ள் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications