
மோசமான போட்டி
இந்நிலையில், அக்தர் தமது கிரிக்கெட் வாழ்க்கையில், மோசமான ஆட்டம் எது என்று பேசியுள்ளார். இது குறித்து மனம் திறந்து அக்தர் கூறியிருப்பதாவது: 2003 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான தோல்வி தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான ஆட்டம் என்றார்.

274 இலக்கு
2003 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி மறக்க முடியாத ஒன்று. அந்த போட்டியில் அணி எடுத்த ஸ்கோர் 273. 274 என்ற இலக்கை அடிக்கவிடாமல் இந்திய அணியை எங்களால் சுருட்ட முடியாமல் போனது. அதுதான் எனது கெரியரின் மோசமான மேட்ச்.

ஏற்கவில்லை
எங்களின் இன்னிங்ஸ் முடிந்தவுடன் இந்த ஸ்கோர் போதாது என்று தெரிவித்தேன். ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை. ஆனால் செஞ்சூரியன் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகம் என்பது எனக்கு தெரியும். ஆனால், கடைசியில் இந்தியா தான் வென்றது.

இடதுகால் வலி
நான் பந்துவீச செல்வதற்கு முன்பே இடது காலில் வலி இருந்தது. வழக்கம்போல முழு வேகத்துடன் ஓட முடியவில்லை. விளைவு.. சச்சினும், சேவாக்கும் எனது பவுலிங்கை பதம் பார்த்துவிட்டனர்.

சிக்சராக விளாசினார்
சச்சின் எனது பந்தை பாயிண்ட் திசையில் சிக்சராக்கினார். எனது பந்தை வெளுத்த, அவருக்கு எப்படி வீசுவதென்றே தெரியாமல் இருந்தேன். அதன் பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னை அழைத்தார் கேப்டன் வக்கார் யூனிஸ்.

வாழ்நாளில் மோசம்
நானும் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி காட்டினேன். ஆனால் அந்த போட்டியில் இந்தியா வென்றது. நல்ல பவுலிங் திறமை இருந்தும், இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை. அதுதான் எனது வாழ்நாளில் மோசமான மேட்ச் என்றார்.


Click it and Unblock the Notifications











