Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை தூக்கிறாதீங்க.. அப்புறம் போட்ட திட்டம் எல்லாம் வீணாப் போயிடும்!

Recommended Video

Akthar Supports Kohli : கோலியை மாற்றக் கூடாது..ஷோயப் அக்தர் ஆதரவு- வீடியோ

ப்ளோரிடா : இந்திய அணியில் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில், அது குறித்து தன் கருத்தை கூறி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர்.

விராட் கோலி - ரோஹித் சர்மா இருவரில் யார் கேப்டனாக இருக்க வேண்டும், இந்திய அணியில் என்ன சிக்கல், ரோஹித் - கோலி விரிசல் என எல்லாவற்றையும் குறித்து பேசி இருக்கிறார் ஷோயப் அக்தர்.

கேப்டனை மாற்ற வேண்டும்

கேப்டனை மாற்ற வேண்டும்

2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், பின்னர் அந்த பேச்சு அடங்கியது.

அக்தர் கருத்து என்ன?

அக்தர் கருத்து என்ன?

அது பற்றி கருத்து கூறிய ஷோயப் அக்தர், கடந்த நான்கு - ஐந்து ஆண்டுகளாக கோலியை வைத்து இந்திய அணியில் நிறைய திட்டங்கள், முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படக் கூடாது என்றார்.

நல்ல பயிற்சியாளர் தான் தேவை

நல்ல பயிற்சியாளர் தான் தேவை

மேலும், இந்திய அணிக்கு நல்ல பயிற்சியாளர், நல்ல தேர்வுக் குழு.. இது தான் தேவை. தேவையான நல்ல உதவியாளர்கள் இருக்கும் பட்சத்தில் கோலி நல்ல கேப்டனாக செயல்படுவார் என்றார். தற்போது தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அக்தர் இதை கூறி இருக்கிறார்.

ரோஹித் நல்ல கேப்டன்

ரோஹித் நல்ல கேப்டன்

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திச் சென்றார். ஆனால், கோலியை நம்பி நிறைய முதலீடு செய்தாகி விட்டது. கோலியை நீக்குவது முட்டாள்தனமானது என்றும் கூறினார் அக்தர்.

இது எல்லாமே பொய்

இது எல்லாமே பொய்

ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே ஆன விரிசல் குறித்தும் கருத்து கூறிய ஷோயப் அக்தர், இந்திய அணியில் கோலி - ரோஹித் என இரு பிரிவு வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்திகள் எல்லாம் உண்மையல்ல. அவர்கள் இடையே விரிசல் இருந்தாலும் அது உலகக்கோப்பைக்கு முன்பே முடிவுக்கு வந்து இருக்கும் என்றார்.

Story first published: Friday, August 2, 2019, 16:38 [IST]
Other articles published on Aug 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+