Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொட்டாவி விட்டவன் வாயில லட்டு மாறி... ஸ்டீவ் ஸ்மித் மவுசு இவ்வளவுதானா.. ஏலத்தில் ஷாக்கான டெல்லி அணி

சென்னை: ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுத்தது அதிர்ச்சியளித்ததாக டெல்லி அணி இணை உரிமையாளர் பார்த் சிண்டால் தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் முக்கிய வீரர்கள் பலரை ஏலம் எடுக்க அணிகள் முன்வரவில்லை.

அந்தவகையில் முதல் சுற்றில் எந்த அணியும் எடுக்க முன்வராமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.

ஏலம்

ஏலம்

ராஜஸ்தான் ராயல் அணியால் கழட்டிவிடப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு ஏலம் விடப்பட்டார். ஆனால் அவர் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. இறுதியில் ஆர்.சி.பி அணி அவரை வாங்க முயற்சித்த போது டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.2.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

ஏலம் குறித்து பேசிய டெல்லி அணி இணை உரிமையாளர், ஸ்மித்தை குறைவான தொகைக்கு எடுத்தது ஆச்சரியமாக இருந்தது. அவரின் பேட்டிங், தலைமை, அனுபவம் டெல்லி அணிக்கு பலம் சேர்க்கும். அவர் அதிக தொகைக்கு ஏலம் போவார் எனக்கருதி வாய்ப்பிருந்தால் எடுக்கலாம் என நினைத்தோம். ஆனால் இதனை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

அனுபவம்

அனுபவம்

31 வயதாகும் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல்-ல் இதுவரை 95 போட்டிகளில் ஆடி 2,333 ரன்கள் அடித்துள்ளார். அவரின் சராசரி ரன் விகிதம் 35.34 ஆக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த ஸ்மித் இந்தாண்டு கழட்டிவிடப்பட்டார்.

வீரர்கள்

வீரர்கள்

ஐபிஎல் தொடரில் புதிய உத்வேகத்துடன் ஆடி வரும் டெல்லி அணி, இந்தாண்டு புதிதாக ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், டாம் கரண், சாம் பில்லிங்ஸ், உள்நாட்டு வீரர்கள் லக்மன் மெரிவாலா, ரிப்பள் பட்டேல், விஷ்ணு வினோத். மணிமாறன் சித்தார்த் ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.

Story first published: Saturday, February 20, 2021, 8:38 [IST]
Other articles published on Feb 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+