Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். எதிரான ஆட்டம்..இந்திய அணியிலிருந்து ரிஷப் பண்ட் அதிரடி நீக்கம்..ரோகித் எடுத்த அதிர்ச்சி முடிவு

துபாய்: 9 மாதங்களுக்கு பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Recommended Video

IND vs PAK இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டல் சுருண்ட Pakistan

கடந்த டி20 உலகக் கோப்பையில் அடைந்த தோல்விக்கு பதிலடி தரும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

துபாய் ஆடுகளத்தை பொறுத்த வரை, டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது.

டாஸ்

டாஸ்

கடைசியாக விளையாடிய 11 போட்டியில், ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வென்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் பெரும் முக்கியத்துவத்தை பெறும். நேற்றைய ஆட்டத்தில் கூட ஆப்கான் பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசுவதாக அறிவித்தது.

பண்ட்க்கு இடமில்லை

பண்ட்க்கு இடமில்லை

இதனைத் தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ஆடுகளத்தில் புற்கள் இருப்பதால், முதல் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். அதனை பயன்படுத்தி கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகிறோம். இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் விளையாடுகிறார்.

நஷிம் ஷா அறிமுகம்

நஷிம் ஷா அறிமுகம்

இதே போன்று ஆவேஷ் கானும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் இங்கு நிறைய விளையாடி இருக்கிறோம். அப்போது இலக்கை துரத்துவத தான் நல்ல முடிவாக இருந்திருக்கிறது என்று ரோகித் சர்மா கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய பாபர் அசாம், நாங்களும் பந்துவீச தான் இருந்தோம். ஆனால் டாஸை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இன்றைய ஆட்டத்தில் அறிமுக வீரராக நஷிம் ஷா களமிறங்குகிறார் என்று கூறினார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய அணி, 1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்கிக், 7. ஜடேஜா, 8, புவனேஸ்வர் குமார், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, ஆவேஷ் கான், 11, சாஹல்

பாகிஸ்தான் அணி 1,பாபர் அசாம், 2, முகமது ரிஸ்வான், 3, ஃபக்கர் சமான், 4, ஆசிஃப் அலி, 5,இஃப்திகார் அகமது, 6, குஸ்தில் ஷா, 7, ஷதாப் கான், 8, முகமது நவாஸ், 9, ஷானவாஸ் தாஹானி 10,ஹரிஸ் ராஃப், 11, நஷிம் ஷா

Story first published: Sunday, August 28, 2022, 19:34 [IST]
Other articles published on Aug 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+