Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Wi 3வது போட்டியில் கோலி, ரோகித் இல்லை..சிஎஸ்கே வீரருக்கு இந்திய அணியில் இடம்..டாசிலும் பாதகம்

டிரிண்டாட் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இடம்பெறவில்லை. இன்றைய ஆட்டத்திலும் டாஸ் போடும்போது ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக களம் இறங்கினார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் கடைசி ஆட்டத்தில் யார் வெல்கிறார்களோ அவர்களே இந்த தொடரை வெல்ல கூடும்.

Shocking decision in team india by resting virat and rohit in series decider vs wi

இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் சாய் ஹோப், இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதுகுறித்து பேசிய அவர் ஆடுகளம் முதலில் வேக பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என நினைக்கிறேன். முதலில் பந்து வீசப் போகிறோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை. பார்படாஸ் ஆடுகளத்தை விட இது பார்க்கும்போது கொஞ்சம் சிறப்பாக இருக்கிறது.

பந்து பேட்டிற்கு வரும் என நினைக்கின்றேன். நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற விரும்புகிறோம் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா, நானும் முதலில் பேட்டிங் செய்ய தான் நினைத்தேன். இதனால் டாஸ் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் இருக்கிறது.

உம்ரான் மாலிக் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டும், அக்சர் பட்டேலுக்கு பதிலாக ருதுராஜூம் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளனர். இன்றைய ஆட்டத்திலும் ரோஹித் சர்மா விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை. தொடரை தீர்மானிக்கக்கூடிய போட்டி என்பதால் வீரர்கள் இந்த ஆட்டத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

ஆடுகளமும் பார்க்க நன்றாகவே இருக்கிறது. இந்த ஆடுகளம் பெரிய மாற்றம் ஏதும் நிகழாது என நினைக்கின்றேன். இதனால் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க விரும்புகிறோம் என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 1, 2023, 19:08 [IST]
Other articles published on Aug 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+