Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.. கோலி, ரோகித்துக்கு வாய்ப்பில்லை..ஸ்ரேயாஸ் கேப்டனாக நியமனம்

சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாட முடிவெடுத்திருக்கிறார்கள். வரும் 2027 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இருவரும் விளையாடும் குறிக்கோளை வைத்து இருக்கிறார்கள்.

இருவரும் இந்திய அணிக்காக கடைசியாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில்தான் விளையாடினார்கள். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருக்கிறார்கள்.

India a squad

இதனால் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா நேரடியாக விளையாடினால் அவர்களுக்கு பயிற்சி இருக்காது என்பதற்காக இந்திய ஏ அணியில் விளையாட வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபோன்று டெஸ்ட் போட்டிகளில் தமக்கு ஆறு மாதம் காலம் ஓய்வு வேண்டும் என கேட்டு வாங்கிய ஸ்ரேயாஸ், தற்போது ஒரு நாள் தொடரில் கேப்டனாக திரும்பி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பிராப்சிம்ரன் சிங், ரியான் பராக், பிரியன்ஸ் ஆர்யா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதே போன்று ரவி பிஸ்னாய், நிஷாந்த் சிந்து குருஜப்னீத் ஸிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதேபோன்று இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா ஹர்ஷித் ராணா, ஆர்ஸ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

முதல் ஒரு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்).), ரியான் பராக், ஆயுஷ் படோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுத்விர் சிங், ரவி பிஷ்னோய், அபிஷேக் சிங் போரல் (விக்கெட் கீப்பர்.)

2வது மற்றும் 3வது ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் (டபிள்யூ கே), ரியான் பராக், ஆயுஷ் படோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், அபிஷ்ரேல் சிங், அபிஷ்ரேல் சிங், (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்

Story first published: Thursday, September 25, 2025, 11:56 [IST]
Other articles published on Sep 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+