Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரதமர் மோடியை மதிக்காத ஸ்ரேயாஸ் ஐயர்.. கட்டம் கட்டி தூக்கிய ஜெய்ஷா.. அந்த காட்சி நினைவிருக்கா?

Shreyas iyer : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட்டதற்கு அரசியல் காரணம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரதமர் மோடியை ஸ்ரேயாஸ் மதிக்காத காரணத்தால் தான் இந்த சம்பவம் நடந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் குற்றச்சாட்டி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீரர்களின் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது உண்டு. முதுகு வலி காரணமாக அவர் பல கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்திருக்கிறார்.

Shreyas iyer attitude during modi visit might be reason for his BCCI contract cancelled

இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 530 ரன்கள் குவித்தார். சராசரியாக 66 ரன்கள் அடங்கும். இப்படி உலக கோப்பையில் பட்டையை கிளப்பிய வீரர்களுக்கு எப்போதுமே கூடுதல் சம்பளம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு துணை கேப்டன் போன்ற பதவிகளும் கிடைக்கும். ஆனால் ஸ்ரேயாஸ்க்கு அப்படி ஏதும் நடக்கவில்லை.

இந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்று கூறி மூன்றாவது டெஸ்டில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் ரஞ்சி போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஆடினார். ஆனால் தமக்கு முதுகு வலி மீண்டும் இருப்பதாக கூறி அவர் ரஞ்சி போட்டியிலிருந்தும் விலகினார்.

ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏதுமில்லை என்று கூறினர். இதனால் பிசிசிஐ கூறியும் ரஞ்சி போட்டியிலிருந்து ஸ்ரேயாஸ் விளையாடவில்லை என்ற காரணத்தால்தான் அவர் நீக்கப்பட்டு இருப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது.ஆனால் இதற்கு காரணம் வேறு ஒன்று இருப்பதாக ரசிகர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அந்த நபர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்ததாகவும், அப்போது மோடி வீரர்களிடம் கைக்குலுக்கிய போது அனைத்து வீரர்களும் மரியாதையுடன் நின்றபோது ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் பிரதமர் மோடி வந்ததை விரும்பாத வகையில் உடல் மொழியில் வெளிகாட்டியதாக அப்போவே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக தான் ஸ்ரேயாஸ் ஐயரை கட்டம் கட்டி ஜெய்ஷா தூக்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.டெஸ்ட் போட்டியில் இருந்து ஒரு ஒரு வீரர் நீக்கப்படுகிறார். அடுத்தது டி20 உலக கோப்பை தான் பெரிய தொடராக இருக்கிறது. அதற்கு முன்பு ipl தொடர் இருக்கிறது. இன்னும் ஆறு மாதத்திற்கு இந்திய அணி எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை.அப்படி இருக்கும் பட்சத்தில் டி20 உலக கோப்பைக்காக வீரர்கள் தயாராவார்களா ? இல்லை ஆறு மாதத்திற்கு பிறகு நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்காக தயாராவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனால் ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷன் ரஞ்சில் இருந்து விலகியது எந்த தவறும் இல்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. ஹர்திக் பாண்டியா மட்டும் இனி டெஸ்டில் திரும்ப வாய்ப்பில்லை என்பதால் டி20 போட்டிக்கு தயாராக அவருக்கு ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத்த நிலையில் இந்திய அணியின் ஸ்டார் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷனுக்கு அந்த அனுமதி ஏன் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை மோடி விவகாரத்துடன் முடிச்சு போட்டால் இப்படி ஒரு காரணம் இருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, February 29, 2024, 7:00 [IST]
Other articles published on Feb 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+