Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

150 கிமீ வேகத்தில் வீசிய பாக். வீரர் ஹரிஸ் ரவுப்.. சுக்கு நூறாக உடைந்த பேட்.. அதிர்ச்சியில் ஸ்ரேயாஸ்

பல்லேகல்லே : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து திரும்பி தன்னுடைய முதல் போட்டியில் விளையாடினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றிருந்தார். இதனால் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

Shreyas iyer bat was broken by haris rauf fast bowling during ind vs pak

இந்த நிலையில் ஸ்ரேயாஸ்க்கு காயம் ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் பாதியில் இருந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் கூட பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பிறகு அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு ஸ்ரேயாஸ் திரும்பினார்.

இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடி 199 ரன்கள் ஸ்ரேயாஸ் எடுத்திருந்தார். இதனால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு தகுந்தார் போல் ஸ்ரேயாஸ் இரண்டு ஷாட் அபாரமாக விளையாடினார். ரோகித் சர்மா 11 ரன்களிலும் விராட் கோலி நான்கு ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இழக்க ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு தகுந்தார் போல் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு அபாரமான ஷாட்டை வெளிப்படுத்தி பௌண்டரிகளை விளாசினார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் இன்று பெரிய ஸ்கோர் அடித்து இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.அப்போது ஹரிஷ் ரவுப் வீசிய பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் அடித்தார். அப்போது அவருடைய பேட் அடிப்பகுதி உடைந்தது.

இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம் அடைந்தார். இந்த இடத்தில் வேறு பேட்டை எடுத்து வர சொல்லி சைகை காட்டினார். எப்போதுமே பேட்ஸ்மனின் பேட் பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் போது உடைந்தால் அது அந்த வீரரின் நம்பிக்கையும் சேர்த்து உடைத்து விடும். இதனால் கவனச் சிதறல் ஏற்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் அதே ஓவரில் ஆட்டம் இழந்தார். 9 பந்துகளை எதிர்கொண்டு ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களை எடுத்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் அடங்கும்.பாகிஸ்தான் வீரர்கள் அசுர வேகத்தில் பந்து வீசியது பேட் உடைந்ததற்கு காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Saturday, September 2, 2023, 20:44 [IST]
Other articles published on Sep 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+