
முதல் டெஸ்ட் போட்டி
ஓப்பனிங் வீரர்கள் கே.எல்.ராகுல் 22 ரன்களுக்கும், சுப்மன் கில் 20 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். நட்சத்திர வீரர் விராட் கோலி 1 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். இதனால் 48க்கு 3 விக்கெட்கள் என தடுமாறி வந்த இந்திய அணியை சட்டீஸ்வர் புஜாரா - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி காப்பாற்றியுள்ளது. புஜாரா ஒருபுறம் 90 ரன்களுக்கு அவுட்டாகிவிட, மற்றொருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் களத்தில் இருக்கிறார்.

புதிய சாதனை
இந்நிலையில் இந்த ஸ்கோர் மூலம் சைலண்ட்டாக ஒரு விஷயத்தை சாதித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். அதாவது இந்தாண்டில் இந்திய அணியில் பெரிதும் கவனிக்கப்பட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் தான். தொடர்ச்சியாக அதிரடி காட்டி மிஸ்டர் 360 டிகிரி என பெயர் பெற்றார். ஆனால் இந்தாண்டில் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் கைப்பற்றியுள்ளார்.

புள்ளிவிவரம்
சூர்யகுமார் யாதவ் 43 இன்னிங்ஸ்களில் 1,424 ரன்களை குவித்திருந்தார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 117 ரன்கள் ஆகும். ஆனால் இதனை முந்தி தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் 38 இன்னிங்ஸ்களில் 1,489 ரன்களை குவித்துள்ளார். 3வது இடத்தில் விராட் கோலி 39 இன்னிங்ஸ்களில் 1,304 ரன்களும், 4வது இடத்தில் ரிஷப் பண்ட் 41 இன்னிங்ஸ்களில் 1,278 ரன்களையும் அடித்துள்ளனர்.

மிடில் ஆர்டர் தேவை
வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் கண்டிப்பாக தேவைப்படும் வீரராக உருவெடுத்துள்ளார். 2023ம் அண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வரவுள்ளதால் அதற்கான திட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











