Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ் ஐயர் உலக சாதனை.. 88 ஆண்டு எந்த கேப்டனும் தொடாத உச்சம்.. தோனியின் ரெக்கார்டும் காலி

ஹராரே: இந்திய டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வெல்வதில் மாபெரும் உலக சாதனை படைத்தார். 88 ஆண்டுகளாக முறியடிக்க முடியாமல் இருந்த சர்வதேச டாஸ் சாதனையை சமன் செய்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்றதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் 8 போட்டிகளிலும் தொடர்ந்து டாஸ் வென்ற உலகின் முதல் வீரர் என்ற பிரம்மாண்ட உலக சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். மேலும் சில சாதனைகளையும் செய்துள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர், ஜூன் 26, 2026 அன்று அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிமுகமானார். அன்றிலிருந்து இங்கிலாந்து தொடர் மற்றும் தற்போதைய ஜிம்பாப்வே போட்டி வரை தான் கேப்டனாகச் செயல்பட்ட எட்டு டி20 போட்டிகளிலும் அவர் டாஸ் வென்று சாதனை படைத்துள்ளார்.

Shreyas Iyer creates world record by winning 8 consecutive tosses as Captain IND vs ZIM T20

இதன் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி மே 2010 முதல் பிப்ரவரி 2012 வரை தொடர்ந்து 7 போட்டிகளில் டாஸ் வென்ற 14 ஆண்டு கால சாதனையை ஸ்ரேயாஸ் முறியடித்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுகமான முதல் 8 போட்டிகளிலும் டாஸ் வென்ற இங்கிலாந்தின் வாலி ஹேமண்டின் 88 ஆண்டு கால உலக சாதனையை ஸ்ரேயாஸ் சமன் செய்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் படைத்த முக்கிய சாதனைகளின் பட்டியல்:

• கேப்டனாக அறிமுகமானது முதல் தொடர்ந்து அதிக டாஸ் வென்றவர்கள் (டி20):

  • ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா) - 8
  • கிரிகோரி டெய்லர் (பஹாமாஸ்) - 7
  • ஷதாப் கான் (பாகிஸ்தான்) - 5

• சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து தொடர்ந்து அதிக டாஸ் வென்ற கேப்டன்கள்:

  • வாலி ஹேமண்ட் (இங்கிலாந்து) - 8
  • ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா) - 8
  • கிரிகோரி டெய்லர் (பஹாமாஸ்) - 7

இந்திய டி20 கேப்டன்களில் அதிக தொடர் டாஸ் வெற்றிகள்:

  • ஸ்ரேயாஸ் ஐயர் - 8 (2026)
  • எம்.எஸ். தோனி - 7 (2010 - 2012)
  • விராட் கோலி - 6 (2019)
  • ரோஹித் சர்மா - 5 (2020 - 2022)

"ஐபிஎல்-லில் வராது ஆனால் தாய்நாட்டுக்காக ஆடும்போது மட்டும் வருமா?" இந்திய வீரர்களை விளாசிய விஹாரி

• முழு உறுப்பினர் அணிகளில் தொடர்ச்சியாக அதிக டாஸ் வென்ற கேப்டன்கள் (டி20):

  • டேரன் சேமி (வெஸ்ட் இண்டீஸ்) - 10
  • சல்மான் ஆகா (பாகிஸ்தான்) - 9
  • ஹாரி புரூக் (இங்கிலாந்து) - 8
  • ஆரோன் ஃபின்ச் (ஆஸ்திரேலியா) - 8
  • ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா) - 8
Story first published: Thursday, July 23, 2026, 19:01 [IST]
Other articles published on Jul 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+