For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 வருஷ மிடில் ஆர்டர் சர்ச்சை..! இவர் தான் அதற்கு முற்றுப்புள்ளி.. இனியும் வெயிட் பண்ண வேண்டாமே?

மும்பை: இந்திய அணியில் 4 ஆண்டுகாலமாக உலாவி வரும் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர்.

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அதில் இந்தியா 2 போட்டிகளிலும் வென்று, தொடரை கைப்பற்றியது.

இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி, கனமழையால் 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. 2வது போட்டியில் கலக்கிய இந்திய அணி அசத்தலாக வென்றது.

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

அந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, 1-0 என்று முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 14ம் தேதி டிரினிடாட் மைதானத்தில் நடக்கிறது.

மிடில் ஆர்டர் பிரச்னை

மிடில் ஆர்டர் பிரச்னை

இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை சற்று உற்று நோக்கினால், அணியில் பல ஆண்டு காலமாக நிலவி வரும் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு கிட்டத்தட்ட தீர்வு கிடைத்து விட்டது என்று சொல்லலாம். 2வது போட்டியில் இந்திய பேட்ஸ் மேன்கள் சொதப்பினர்.

அற்புதமான பேட்டிங்

அற்புதமான பேட்டிங்

அப்போது மிடில் ஆர்டரான 5வது இடத்தில் இளம்வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். மற்ற வீரர்களை போல சொதப்பலாக ஆட வில்லை. சிறப்பாக ஆடினார். நேர்த்தியான பேட்டிங், டைமிங் ஷாட்டுகள், விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பது என பொறுப்பாக விளையாடி 71 ரன்கள் எடுத்தார்.

125 ரன்கள் சேர்ப்பு

125 ரன்கள் சேர்ப்பு

அந்த போட்டியில் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்தனர். அணியின் வெற்றிக்கு முக்கயி காரணமாக அமைந்தவர் ஸ்ரேயாஸ் அய்யர். ஆனால், முன்னதாக களமிறங்கிய ரிஷப் பன்ட், வழக்கம் போல பொறுப்பில்லாமல் தனது விக்கெட்டை இழந்தார்.

கிடைத்தே விட்டார்

கிடைத்தே விட்டார்

அந்த தருணத்தில் இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று விளையாட ஒருவர் கிடைத்து விட்டார் என விமர்சகர்களும், ரசிகர்களும் பெருமூச்சு விட்டுள்ளனர்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

முன்னதாக நடந்த உள்ளூர் தொடரிலும் ஸ்ரேயாஸ், சிறப்பாக செயல்பட்டார். தொடர்ந்து நடந்த ஐபிஎல் தொடரிலும் ஸ்ரேயாஸ் அற்புதமாகவே ஆடினார். அதே போல கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டார் என்று சொல்லலாம்.

நெருக்கடியை சமாளித்தவர்

நெருக்கடியை சமாளித்தவர்

அதை தான் கோலியும் சொல்லி இருக்கிறார். ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு நம்பிக்கை மிக்க வீரர். ஆட்டத்தை அதன் வழியிலேயே கொண்டு சென்று, நெருக்கடியை சிறப்பாக சமாளித்தார். நான் ஆட்டமிழந்த பின்னர், தொடர்ந்து சிறப்பாக விளையாடி, கூடுதல் ரன்கள் எடுத்தார் என்று அவர் புகழ்ந்தார்.

ஜாம்பவான்கள் கருத்து

ஜாம்பவான்கள் கருத்து

மிடில் ஆர்டருக்கு ஒரு சிறப்பான வீரர் கிடைத்துவிட்டார் என்று முன்னாள் ஜாம்பவான்களும், வல்லுநர்களும் கூறி இருக்கின்றனர். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று சொல்லலாம். ஆனால் சில நாட்களுக்கு முன்பு கோலி என்ன கூறினார் என்பதை ஒரு தடவை ரீப்ளே செய்து பார்த்துவிடலாம்.

ஓயாத பிரச்னை

ஓயாத பிரச்னை

ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக ஏமாற்றமளித்துவருகிறார். ஆனால் அவர் தான் அடுத்த விக்கெட் கீப்பர் என்று அணி நிர்வாகம் உறுதி செய்து விட்டது. அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் நிறைய வாய்ப்புகள் வழங்கப்படும். இதை சொன்னது கோலி தான். ஆக... 4ம் வீரர் பிரச்னை இப்போதைக்கு ஓயாது எனலாம்.

Story first published: Monday, August 12, 2019, 18:20 [IST]
Other articles published on Aug 12, 2019
English summary
Shreyas iyer is suitable for 4th place says experts.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+