ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தியாகம்.. இதை எல்லாம் எப்படி மறந்தீங்க.. இது பழிவாங்கும் படலம் தான்
Shreyas iyer : ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் விதமாக ரஞ்சி போட்டியில் விளையாட மறுத்துவிட்டார் என்ற காரணத்தைக் கூறி ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்ட ஊதிய ஒப்பந்தம் பிசிசிஐயால் புதுப்பிக்கப்படவில்லை. பல சீனியர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடாத நிலையில் ஸ்ரேயாஸ் மீது மட்டும் குறி வைத்து பிசிசிஐ ஏன் இவ்வாறு செய்தது என்று கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் போட்டிக்காக ரஞ்சி போட்டியை விட்டு விட்டார் என்று கூறும் கருத்துக்கு ஸ்ரேயாஸ் தரப்பு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் செய்த தியாகங்கள் எல்லாம் மறந்து விட்டதா என்று அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் எல்லாம் உலக கோப்பையில் இருந்து பாதியில் விலகிய நிலையில் ஒரு முழு ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக முழு ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருந்தார்.
ஆனால் அவர் நினைத்திருந்தால் நிச்சயம் ஐபில் போட்டிகளில் விளையாடிருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்த பிறகும் ஸ்ரேயாஸ்க்கு முதுகு வலி இருந்ததால் உலகக்கோப்பையில் அவர் மூன்று முறை வலி நிவாரண ஊசிகளை போட்டுக் கொண்டதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் உலகக்கோப்பை அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் ஸ்ரேயாஸ் வலியுடன் தான் விளையாடியதாகவும் இப்படி அவருடைய உடல்நிலை இருந்தும் ஸ்ரேயாஸ் உலககோப்பை தொடர்ப முடிந்த பிறகு எந்த ஓய்வும் வழங்காமல் ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா தொடர்களில் விளையாட வைத்ததாகவும் அவருடைய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தென்னாபிரிக்க தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் வந்த பிறகு அவரை ரஞ்சி போட்டியில் பிசிசிஐ விளையாடக்கூடியதாகவும் அதையும் அவர் செய்த நிலையில் தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
தற்போது கூட கே கே ஆர் அணியில் உள்ள அகாடமிக்கு சென்று உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் தான் ஸ்ரேயாஸ் ஈடுபட்டதாகவும், இதற்கு கூட அவருக்கு உரிமை இல்லையா என்று ஸ்ரேயாஸ் தரப்பு கேள்வி கேட்டுள்ளது. இப்படி ஸ்ரேயாஸ் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு தற்போது அவருடைய ஒப்பந்தம் நீக்கப்பட்டு இருப்பதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்றும் ஸ்ரேயாஸ் ரசிகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications