Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க இப்படி ஆயிடுச்சு... சிக்கலிலும் தவிப்பிலும் டெல்லி கேபிடல்ஸ்... என்ன முடிவு எடுப்பாங்க?

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நேற்றைய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பீல்டிங்கில் ஈடுபட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு தோள்பட்டையில் காயம் பலமாக உள்ள நிலையில், அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால் நேற்றைய தினம் ஷ்ரேயாஸ் ஐயருக்கு சிறப்பாக அமையவில்லை. புதுமுகங்கள்கூட சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களை மட்டுமே அடித்தார்.

ஆட்டத்திலிருந்து வெளியேற்றம்

ஆட்டத்திலிருந்து வெளியேற்றம்

ஆயினும் சிறப்பான பீல்டிங்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் துவக்கத்திலேயே ஒரு பந்தை தடுக்க முயன்றபோது அவருக்கு தோள்படடையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலியால் துடித்த அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

போட்டிகளில் பங்கேற்கமாட்டார்

போட்டிகளில் பங்கேற்கமாட்டார்

இந்நிலையில் அவருக்கு தோள்பட்டை காயம் அதிகமாக உள்ள நிலையில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. மூட்டு விலகியிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், அவர் அடுத்ததாக வரும் ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

பங்கேற்பதில் சிக்கல்

பங்கேற்பதில் சிக்கல்

ஆயினும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அதனால் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்பதிலும் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ஷ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல்லில் பங்கேற்காவிட்டால் அவருக்கு பதிலாக அணியை யார் வழிநடத்துவார்கள் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

திறமையாக வழிநடத்திய ஷ்ரேயாஸ்

திறமையாக வழிநடத்திய ஷ்ரேயாஸ்

கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி முதல் முறையாக இறுதிப்போட்டி வரையில் வழிநடத்தி சென்றவர் ஷ்ரேயாஸ் ஐயர். இளம் வீரராக இருந்தாலும் அவரது ஆளமை பண்புகள் கடந்த ஐபிஎல் 2020 சீசனில் சிறப்பாக பேசப்பட்டன. தற்போது அணியின் அடுத்த கேப்டன் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, March 24, 2021, 12:50 [IST]
Other articles published on Mar 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+