Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஹா..! ஆஹா..! கண்டுபிடித்தே விட்டோம்.. இனி நீங்கள் நம்பர் 4 பேட்ஸ்மென் என்று அழைக்கப்படுவீராக..!!

மும்பை: இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு 4வது இடத்தில் விளையாட தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை வெற்றி கரமாக முடித்துள்ளது. அடுத்து டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில தினங்களுக்கு முன்னர் 2021ம் ஆண்டு வரை நீடிப்பார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து தற்போது ரவி சாஸ்திரி இந்திய அணியில் நிலவி வரும் 4ம் வீரர் பிரச்னை குறித்து வாய் திறந்துள்ளார். அவர் கூறியதாவது : உலக கோப்பை தொடரின் 4வது வீரர் குறித்து பல கேள்விகள் எழுந்தன.

4வது வீரர்

4வது வீரர்

நாங்களும் 4வது வீரராக வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி மாற்றி சோதனை செய்தோம். ஆனால் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்று பலர் கூறி வருகின்றனர்.

நன்றாக ஆடினார்

நன்றாக ஆடினார்

தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் நன்றாக விளையாடினார். குறிப்பாக மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் விழுந்தாலும் 5வது வீரராக இறங்கி சிறப்பாக ஆடினார்.

இனி வாய்ப்பு

இனி வாய்ப்பு

எனவே இனிவரும் தொடர்களில் அவருக்கு 4வது வீரராக களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படும். அவருடைய ஆட்டம் ஏற்ப சிறப்பாக இருக்கிறது. சூழலை பொறுத்து நன்றாக ஆடுகிறார்.

நம்பர் 4வது இடம்

நம்பர் 4வது இடம்

எனவே இனிவரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இனி 4வது வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தான், அவருக்கு போதிய அளவு வாய்ப்புகள் வரும் தொடர்களில் தரப்படும் என்று கூறினார்.

Story first published: Sunday, August 18, 2019, 19:14 [IST]
Other articles published on Aug 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+