Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் - சாரா இடையிலான வயது வித்தியாசம்.. அப்படியே சச்சின் டெண்டுல்கரை பின்பற்றிய மகள்!

மும்பை: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இடையில் 2 வயது வித்தியாசம் இருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறி இருக்கிறது. சச்சின் டெண்டுல்கரை விடவும் அவரது மனைவி அஞ்சலி 2 வயது சீனியர் என்பது உலகமே அறிந்த ஒன்றாகும். அதுபோல் சாராவும் சுப்மன் கில்லை விட 2 வயது சீனியராக இருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் இருவரும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருகின்றனர். ஆனால் இருவருமே இதனை பொதுவெளியில் ஒப்புக் கொள்ளாத நிலையில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சர்ச்சை லைம்லைட்டிலேயே இருக்கிறது. அதனை உறுதி செய்யும் வகையில் சுப்மன் கில்லின் சகோதரி சாராவுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார்.

Shubman Gill and Sara Tendulkar

இன்ஸ்டாகிராமில் சாரா மற்றும் சுப்மன் கில் சகோதரி இருவரும் பின் தொடர்ந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் போது சுப்மன் கில் 3 ஆண்டுகளாக தான் எந்தவொரு உறவிலும் இல்லை என்று கூறி இருந்தாலும், அண்மையில் யுவராஜ் சிங் நடத்திய தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது சாரா - சுப்மன் கில் இடையிலான உறவு குறித்து மீண்டும் பேச்சுகள் எழுந்தன. அதேபோல் சாரா டெண்டுல்கர் தனது அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறார். அண்மையில் ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டார். இந்த பிரச்சாரத்திற்காக செலவிடப்படும் தொகை ரூ.1,140 கோடியாகும்.

இதன் காரணமாக சாரா டெண்டுல்கருக்கு மிகப்பெரிய ஊதியம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இன்ஸ்டாகிராம் மற்றும் மாடலிங் துறை மூலமாக ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை சாரா வருமானம் ஈட்டி வருகிறார். தற்போது விளம்பரத் தூதராக மாறி இருப்பதன் மூலமாக அவரின் சொத்து மதிப்பு உயரத் தொடங்கி இருக்கிறது. அதேபோல் 27 வயதாகும் சாரா டெண்டுல்கர் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாரா டெண்டுல்கர் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரின் வயதும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 25 வயதை எட்டி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் 27 வயதை எட்டி இருக்கிறார். இருவருக்கும் இடையில் 2 வயது வித்தியாசம் இருக்கிறது. இதனால் தந்தையை போல் மகள் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி இருவருக்கும் இடையில் 2 வயது வித்தியாசம் உள்ளது. சச்சினை விடவும் அஞ்சலி 2 வயது சீனியர். அதுபோல் சுப்மன் கில்லை விடவும் சாரா டெண்டுல்கர் 2 வயது சீனியராக இருக்கிறார். லண்டனில் நடந்த சந்திப்புக்கு பின் மீண்டும் சுப்மன் கில் - சாரா இடையிலான உறவு மலர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அதிகாரப்பூர்வமாக இருவரும் தங்களின் உறவை பொதுவெளியில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, August 13, 2025, 13:12 [IST]
Other articles published on Aug 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+